மதுரையில் தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் குழுமத்தின் கிரிக்கெட் மைதானம் 12.5 ஏக்கர் பரப்பளவில் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று மும்பையில் இருந்து தனியார் விமானம் மூலம் எம் எஸ் தோனி தற்போது புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனையடுத்து, மதுரை விமான நிலையத்தில் தோனியை பார்ப்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர்.
முதல் முறையாக மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி வருகையொட்டி காலை முதலே அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தோனி வருகையை ஒட்டி விமான நிலையத்தில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.