Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»தற்காலிக போர் நிறுத்தம்; பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு – ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல்
    உலகம்

    தற்காலிக போர் நிறுத்தம்; பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு – ஹமாஸ், இஸ்ரேல் ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 10, 2025Updated:October 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CeaseFire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

    முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கடந்த 4 நாட்களாக இருதரப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமர்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023 அக்டோபர் தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 20 பிணைக் கைதிகள் மற்றும் சுமார் 27 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விரைவில் காஸாவில் இருந்து தங்கள் நாட்டுப் படைகளை இஸ்ரேல் விலக்கிக் கொள்ளும். இது வலுவான, நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான தொடக்கமாகும். அமைதி ஒப்பந்தத்தின்படி அனைவரும் நியாயமாக நடத்தப்படுவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    donald trump Gaza Hamas Israel Palestine temporary ceasefire இஸ்ரேல் காஸா டொனால் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தம் பாலஸ்தீனம் ஹமாஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணியாளர்கள் போராட்டம்: ரிப்பன் மாளிகையில் பரபரப்பு; 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
    Next Article கரூர் கூட்டநெரிசல் விவகாரம்: நீதிமன்றத்தில் இரு தரப்பும் காரசார விவாதம்
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.