Close Menu
    What's Hot

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா
    விளையாட்டு

    ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து அபாரம் – 318/2 என்ற வலுவான நிலையில் இந்தியா

    Editor TN TalksBy Editor TN TalksOctober 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Yashasvi Jaiswal 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 318 ரன்கள் குவித்துள்ளது.

    இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 58ஆக இருந்தபோது, கே.எல்.ராகுல் 38 ரன்களில் வெளியேறினார்.

    அதன் பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தனர். இதனை யடுத்து, 145 பந்துகளில் ஏழாவது சதத்தை கடந்த ஜெய்ஸ்வால், 224 பந்துகளில் (19 பவுண்டரிகள்) 150 ரன்கள் குவித்தார்.

    இதன் மூலம் குறைந்த வயதில் அதிக சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்களில் கிரீம் ஸ்மித் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார். இருவரும் 24 வயதிற்குள் 7 சதங்களை அடித்துள்ளனர். மேலும், அவர் அடித்த 7 சதங்களில் 5 சதங்கள் 150 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டதாகும். அதேபோல், குறைந்த வயதில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேல் விளாசியவர்களில் டான் பிராட்மேனுடன் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    இதற்கிடையில், சாய் சுதர்ஷன் 87 ரன்களில் வெளியேறினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், சுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    2nd Test match 2ஆவது டெஸ்ட் போட்டி Don Bradman Graeme Smith india Sai Sudarshan West Indies Yashasvi Jaiswal இந்தியா கிரீம் ஸ்மித் சாய் சுதர்சன் டான் பிராட்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் 41 பேர் பலியான விவகாரம் – காரசார விவாதம்; தீர்ப்பு ஒத்திவைப்பு (முழு விவரம்)
    Next Article இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் – துணை முதல்வர் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    June 13, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.