Close Menu
    What's Hot

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை மாணவியை வன்கொடுமை – 3 பேரை சுட்டு பிடித்த தனிப்படை
    தமிழ்நாடு

    கோவை மாணவியை வன்கொடுமை – 3 பேரை சுட்டு பிடித்த தனிப்படை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 4, 2025Updated:November 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    coimbatore 2025 11 026749f87e3651f751c90f7bc775dbb6 3x2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

    நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் பின்புறம் காரில் தனது ஆண் நண்பருடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருத்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து பைக் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு கோணத்தில் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மாணவியை வன்கொடுமை செய்த 3 பேரும்  துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த மூன்று பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 3பேரும் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்திபோது சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர்கள் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காலில் குண்டு பாய்ந்து 3 பேரும் பிடிபட்டனர்.

    விசாரணையில் 3பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன்  என்பது தெரியவந்தது. பின்னர்  காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்  விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய  இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

    அதில் கருப்பசாமி,காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் அவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கல்லூதி மாணவியை கூட்டு பாலியல் துப்புறுத்தல் செய்த 3 பேரை நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Coimbatore gun shoot rape case கோவை மாணவி துப்பாக்கிச் சூடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்கள் நீல நிற பெண்களின் சாதனை – வாழ்த்திய ரஜினி
    Next Article நள்ளிரவில் பதற்றமான கோவை – துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் தடயவியல் சோதனை
    Editor TN Talks

    Related Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    July 17, 2026

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    July 17, 2026

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.