Close Menu
    What's Hot

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின்
    அரசியல்

    “வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025Updated:November 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalinnn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன.

    வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்த கட்டம்தான் எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று!

    இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?” என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    முன்னதாக, புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை என்றும், ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    stalin#dmk#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleTamil Nadu SIR திமுக வாதம் அர்த்தமற்றது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    Next Article “இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    Trending Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்!. 5,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பள்ளிகள் மூடல்!.

    February 24, 2026

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026

    40 கேட்ட பாஜக!. 25 தான் என கையை விரித்த இபிஎஸ்?. தாமரைக்கு நோ சொல்லும் சிறிய கட்சிகள்!.

    February 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.