Close Menu
    What's Hot

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.4 ஆக பதிவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
    தேர்தல் 2026

    வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ptkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய கடமை ஆளும் கட்​சி​யான திமுக​வுக்கு இருப்​ப​தாக புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி தெரி​வித்​தார்.

    இது தொடர்​பாக நேற்று கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நவம்​பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​கள் (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. பிஹாரில் இப்​பணியை மேற்​கொள்​ளும் போது, லட்​சக்கணக்​கான வாக்​காளர்​கள் விடு​பட்​டுள்​ளனர். தமி​ழ​கத்​தில் மேற்​கொள்​ளப்​படும் எஸ்​ஐஆர் பணி​கள் எந்​த​வித​மான குற்​றச்​சாட்​டு​களுக்​கும் இடமின்றி நேர்​மை​யாக நடை​பெற வேண்​டும். அதேசம​யம், டிசம்​பர் 4-ம் தேதிக்​குள் பல கோடி வாக்​காளர்​களின் அனைத்து தரவு​களை​யும் சரி​பார்த்து எப்​படி இந்த பட்​டியல் தயா​ரிக்​கப்​படும் என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது.

    கிரா​மங்​களில் மக்​கள் காலை​யிலேயே பணி​களுக்​குச் சென்​று​விடு​வார்​கள். அப்​படி இருக்​கும் போது ஒரு மாத காலத்​தில் 6 கோடிக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​களை எப்​படி தேர்​தல் ஆணை​யத்​தால் நியமிக்​கப்​பட்ட அதி​காரி​கள், சந்​தித்து அவர்​கள் வழங்​கும் படிவங்​களை பூர்த்​தி​செய்து கொடுப்​பார்​கள் என்று தெரிய​வில்​லை.

    படிவங்​களை பூர்த்தி செய்​யும்​போது, அதற்​குரிய ஆவணங்​களை​யும் இணைக்க வேண்​டும் என கூறுகின்​ற​னர். படிவம் பூர்த்தி செய்​யப்​பட​வில்லை என்​றால் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்பட மாட்​டாது என தெரி​வித்​துள்​ளனர். இதனால் தமி​ழ​கத்​தில் பாதி வாக்​காளர்​களை சேர்ப்​பதே கடின​மாகி​விடும். நல்ல நோக்​கத்​துக்​காக எடுத்த முயற்​சி​யின் போது தவறு நடந்​தால் பல வாக்​காளர்​கள் விடு​பட்​டுப் போவார்​கள். இதனால் தேர்​தல் நேரத்​தில் மிகப்​பெரிய போராட்​டம் வெடிக்​கும். ஆகவே, தேர்​தல் ஆணை​யம் இதைக் கவனத்​துடன் மேற்​கொள்ள வேண்​டும்.

    குறைந்​தது 2 மாத கால அவகாசம் கொடுத்து அனைத்து குக்​கி​ரா​மங்​களி​லும் முகாம் நடத்த வேண்​டும். சத்​துணவு பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​களால் இப்​பணி​களை செய்ய முடி​யாது. அதனால் மத்​திய – மாநில அரசு ஊழியர்​களை இதில் பயன்​படுத்​தி​னால் தான் குறைந்​த​பட்​சம் 90 முதல் 95 சதவீதம் வரை துல்​லிய​மாக வாக்​காளர் பட்​டியல் தயா​ரிக்க முடி​யும்.

    திமுக தொடங்​கப்​பட்டு 76 ஆண்​டு​களாகிறது. தமிழ்​நாட்​டில் திமுக தான் ஆட்​சி​யில் உள்​ளது. அவர்​களிடம் ஆட்சி இயந்​திர​மும் கட்சி இயந்​திர​மும் இப்​போது உள்​ளது. எனவே, வாக்​காளர் பட்​டியல் தவறு​தலாக வந்​து​வி​டா​மல் தடுக்க வேண்​டிய ஜனநாயகக் கடமை திமுக-வுக்கு இருக்​கிறது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

    krishnasamy#tn#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது: செங்கோட்டையன்
    Next Article திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
    Editor TN Talks

    Related Posts

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    December 26, 2025

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    December 25, 2025

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    குஜராத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.4 ஆக பதிவு

    பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. 152 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா

    அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.