Close Menu
    What's Hot

    7 தொகுதிகள்; தனிச்சின்னம் கேட்கும் ஐஜேகே!. பாரிவேந்தர் டிமாண்ட்!

    தடையம் முதல் இக்கிஸ் வரை!. இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!

    மீண்டும் டெல்லியின் பெயர் மாற்றமா?. மகாபாரத காலம் முதல் இன்றுவரை எத்தனை முறை மாற்றப்பட்டது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
    விளையாட்டு

    4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    indiaaaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் இருந்தது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்ஷர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    168 ரன்கள் இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நன்கு துவக்கம் தந்தனர்.பின்னர், துபே வீசிய பந்தில் மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, மேத்தீவ் சாரட் 25 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    cricket#india#win
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு; கேள்விக்குறியான ஷமியின் எதிர்காலம்!
    Next Article “ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி” – கிருஷ்ணசாமி திட்டவட்டம்
    Editor TN Talks

    Related Posts

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    February 25, 2026

    டி20 உலகக்கோப்பை 2026!. வரலாறு படைத்த ஹாரி ப்ரூக்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இங்கிலாந்து!

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    7 தொகுதிகள்; தனிச்சின்னம் கேட்கும் ஐஜேகே!. பாரிவேந்தர் டிமாண்ட்!

    தடையம் முதல் இக்கிஸ் வரை!. இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!

    மீண்டும் டெல்லியின் பெயர் மாற்றமா?. மகாபாரத காலம் முதல் இன்றுவரை எத்தனை முறை மாற்றப்பட்டது?

    8ம் வகுப்பு புத்தகத்தில் சர்ச்சை பாடம்!. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!.

    2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?

    Trending Posts

    2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?

    February 26, 2026

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    போராளி நல்லக்கண்ணு: போராட்டம்.. சிறைவாசம்.. எளிமை… வேட்கை…

    February 26, 2026

    8ம் வகுப்பு புத்தகத்தில் சர்ச்சை பாடம்!. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!.

    February 26, 2026

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    February 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.