Close Menu
    What's Hot

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    அணு ஆயுத நாடாக நீடிப்பதில் வடகொரியா மீண்டும் உறுதி: சர்வதேச அழுத்தங்களுக்கு மறுப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»65.08% வாக்குப்பதிவு பிஹாரில் மாற்றம் நிச்சயம் என்பதற்கான அடையாளம்: பிரசாந்த் கிஷோர்
    அரசியல்

    65.08% வாக்குப்பதிவு பிஹாரில் மாற்றம் நிச்சயம் என்பதற்கான அடையாளம்: பிரசாந்த் கிஷோர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது என்றும், 65.08% வாக்காளர்கள் முதல்கட்ட தேர்தலில் பங்கேற்றுள்ளதாகவும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

    சுபாலில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பிஹாரில் என்ன நடக்கப் போகிறது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றில் பிஹாரில் அதிக வாக்குப்பதிவு நடக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது.

    ஜன் சுராஜ் கட்சி பிஹார் அரசியலில் முதன்முதலில் கால் பதிக்கிறது. தற்போதுள்ள அரசியல் அமைப்புக்கு ஓர் உண்மையான மாற்றாக எங்கள் கட்சி விளங்குகிறது. 30 ஆண்டுகளாக ஒரே அரசியலை பார்த்த வாக்காளர்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள். பிரதமருக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், ஆர்ஜேடி மீது பயத்தை விதைத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார். ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது. நீங்கள் காட்டாட்சி திரும்பக்கூடாது என்று சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணி ஏன் வேண்டும்? ஜன் சுராஜ்தான் பிஹாரின் புதிய மாற்று.

    சுதந்திரத்திற்குப் பிறகு பிஹாரில் இதுவே மிக அதிகமான வாக்கு சதவீதம். இது இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது: கடந்த ஆண்டு நான் சொன்ன விஷயம், பிஹாரின் 60% க்கும் அதிகமான மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஒரு மாற்று இல்லை என்ற எண்ணம் மக்களிடம் மாறியுள்ளது. ஜன் சுராஜ் வந்த பிறகு, மக்களுக்கு ஒரு மாற்று கிடைத்தது. மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.

    பிஹார் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அறிவித்தார். முன்னதாக 64.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரபூர்வமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    pk#prasant#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலத்துக்கு ஏற்ற வகையில் கல்வித்திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்… அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு
    Next Article மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி
    Editor TN Talks

    Related Posts

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    June 14, 2026

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    June 14, 2026

    பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    அணு ஆயுத நாடாக நீடிப்பதில் வடகொரியா மீண்டும் உறுதி: சர்வதேச அழுத்தங்களுக்கு மறுப்பு!

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.