Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இரவு நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை: கோயில் நிர்வாகம்
    தமிழ்நாடு

    இரவு நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை: கோயில் நிர்வாகம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

    அவ்வாறு வரும் பக்தர்கள், அன்று சாமியை தரிசனம் செய்ய முடியாத பட்சத்தில் மறுநாள் முருகனை தரிசிப்பதற்காக கோயில் கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கடற்கரை பகுதியில் தங்குபவர்களிடம் திருட்டு போன்ற குற்றச் சம்பவம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் நேற்று இரவு முதல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை யாரும் தங்க அனுமதி இல்லை என பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    பின், கடற்கரை பகுதியில் இருந்த அனைவரையும் திருக்கோயில் பணியாளர்கள், காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் சேர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால், பக்தர்கள் கோயில் வளாகங்கள் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதனால் இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையானது ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    trichendur#koil
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
    Next Article மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
    Editor TN Talks

    Related Posts

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    April 21, 2026

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.