Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா! 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா! 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sekar babu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 21 ஆம் தேதி ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், ”அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள், 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சுமார் 35 லட்சத்தில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், 200 தனியார் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளன. இது மட்டுமின்றி, 500 ஆந்திரா பேருந்துகள், 20 கர்நாடகா பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 16 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

    திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15,011 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 24 தீயணைப்பு வாகனங்கள், 430 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

    அண்ணாமலையார் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் 1,060 கண்காணிப்பு கேமராக்கள், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது பக்தர்கள் ஏரி தீப தரிசனம் காண்பதை மலையின் உறுதி தன்மையை பொருத்தும், மழையின் அளவை பொருத்தும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

    sekar babu#tv malai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாதவிடாய் நாட்களில் கால்கள் வலிப்பது ஏன்? தடுப்பது எப்படி?
    Next Article சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் தீவிர பயிற்சி
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    February 18, 2026

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    February 18, 2026

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.