Close Menu
    What's Hot

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் தீவிர பயிற்சி
    விளையாட்டு

    சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சாய் சுதர்சன், துருவ் ஜூரெல் தீவிர பயிற்சி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cricc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 124 ரன்​கள் இலக்​கைக்​கூட எட்ட முடி​யாமல் 30 ரன்​கள் வித்​தியாசத்​தில் தோல்வி அடைந்​தது.

    இந்த ஆட்​டத்​தில் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்ட ஆடு​களத்​தில் இந்​திய அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் தென் ஆப்​பிரிக்க அணி​யின் சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக திணறி​னார்​கள். இதனால் இந்​திய அணி​யின் ஆட்ட அணுகு​முறை​யும், கவுதம் கம்​பீரின் பயிற்சி திட்​டங்​களும் விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

    போட்​டியை 3 நாட்​களில் முடிக்​கும் வகை​யில் ஆடு​களங்கள் அமைக்​கப்​பட்டு வரு​வதாக​வும் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்​டி​யில் தொடங்​கு​கிறது.

    இந்த போட்​டி​யில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்​டிய நெருக்​கடி இந்​திய அணிக்கு ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இந்​திய அணி வீரர்​கள் 3 மணி நேரம் தீவிர பேட்​டிங் மற்​றும் பீல்​டிங் பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர். சாய் சுதர்​சன், துருவ் ஜூரெல் ஆகியோர் கவுதம் கம்​பீர் முன்​னிலை​யில் சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக பேட்​டிங் பயிற்சி செய்​தனர்.

    அது​வும் முன்​னங்​காலில் கால்​காப்பு அணியாமல் பேட்​டிங் செய்​தனர். சுழன்று வரும் பந்​துகளுக்கு எதி​ராக தற்​காப்பு ஆட்​டம் மேற்​கொள்​ளும் போது கால்​காப்​பில் பந்தை வாங்​காமல் இருப்​ப​தற்​காக இந்த முறை கையாளப்​பட்​டது. மேலும் இடது கை பேட்​ஸ்​மேன்​கள் சுழற்​பந்து வீச்​சாளர்​களின் கையைப் புரிந்​து​கொண்டு கால்​களை நகர்த்தி விளை​யாடு​வ​தில் உள்ள சிரமங்​களை சரி செய்​வதற்​கும் வழிகள் தேடப்​பட்​டன.

    சாய் சுதர்​சன், முதல் டெஸ்ட் போட்​டி​யில் சேர்க்​கப்​பட​வில்​லை. குவாஹாட்டி போட்​டி​யிலும் அவருக்கு விளை​யாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்​குமா என்​ப​தற்கு எந்​த​வித உத்​தர​வாத​மும் இல்​லை. எனினும் கழுத்து பகு​தி​யில் காயம் அடைந்​துள்ள ஷுப்​மன் கில் களமிறங்க முடி​யாத நிலை உரு​வா​னால் சாய் சுதர்​சனுக்கு வாய்ப்பு கிடைக்​கக்​கூடும்.

    சுழற்​பந்து வீச்சை தொடர்ந்து வேகப்​பந்து வீச்சுக்கு எதி​ராக​வும் சாய் சுதர்​சன் பேட்​டிங் செய்​தார். ஆகாஷ் தீப் வீசிய பந்​துகளில் பல முறை எட்ஜ் ஆனது. மேலும் வலை பயிற்சி பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக​வும் சாய் சுதர்​சன் தடு​மாறி​னார். இதைத் தொடர்ந்து கவுதம் கம்​பீரும், பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான சிதான்ஷு கோட்​டக்​கும் சாய் சுதர்​சனுக்கு ஆலோ​சனை​கள் வழங்​கினர்.

    அதேவேளை​யில் துருவ் ஜூரெல், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்​களில் அதி​க கவனம் செலுத்தி பயிற்​சி​யில் ஈடு​பட்​டார். அவருடன் ரவீந்​திர ஜடேஜா​வும் நீண்ட நேரம் பேட்​டிங் செய்​தார். இது ஒரு​புறம் இருக்க நித்​திஷ் குமார் ரெட்டி இந்​தியா ‘ஏ’ அணி​யில் இருந்து வில​கி, கொல்​கத்​தா​வில்​ பயிற்​சி பெற்​று வரும்​ இந்​தி​ய அணி​யுடன்​ இணைந்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா! 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    Next Article பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸமுக்கு அபராதம்
    Editor TN Talks

    Related Posts

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    June 14, 2026

    36 வருச காத்திருப்பு… ஸ்காட்லாந்தின் ராஜ நடை! துருக்கியை வீழ்த்தி ஆஸி. அசுர வேட்டை!

    June 14, 2026

    மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.