Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»90-95 வயதில் கூட நல்ல ஆரோக்கியத்துடன் இளமையாக வாழ முடியும் – எரிக் வெர்டின் நம்பிக்கை !!!
    LIFESTYLE

    90-95 வயதில் கூட நல்ல ஆரோக்கியத்துடன் இளமையாக வாழ முடியும் – எரிக் வெர்டின் நம்பிக்கை !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Eric M Verdin Buck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மனிதர்களான நாம் அனைவரும் நிச்சயமாக 90 வயது முதல் 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் அதே சமயம் இளமையாகவும், நலமாகவும் வாழ முடியும் என்று பெல்ஜியத்தைச் சேர்ந்த முதுமை தொடர்பான அறிவியல் ஆய்வாளர் எரிக் வெர்டின் கூறியுள்ளார். சராசரியாக மக்கள் 60 முதல் 75 வயது வரை தான் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மனது வைத்தால் 90 முதல் 95 வரை சீரான நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    எந்த வயதானாலும் சரி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முறையான விஷயங்களை ( உடற்பயிற்சி செய்வது, சிறந்த சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது ) செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறியுள்ளார்.

    நல்ல ஆரோக்கியத்துடன் என்றும் இளமையுடன் வாழ மிக முக்கியமான கூறாக பார்க்கப்படுவது நல்ல தெளிவான மனநிலை தான். எந்தவித குழப்பமும், மனசு சோர்வும் இன்றி நம்பிக்கையுடன் மன நிம்மதியுடன் வாழ தொடங்க வேண்டும்.

    IMG 20251120 192725

    மனிதனின் உடலில் ஆரோக்கியம் நிலையாக இருக்க, தூக்கம் நிலையாக இருக்க வேண்டும். குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஒருவர் நன்கு உறங்க வேண்டும். அன்றாடம் குறைந்தது 15 முதல் 30 நிமிடம் வரை சிறிய உடற்பயிற்சி ( நடப்பது, மாடிப்படி ஏறி இறங்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற சுறுசுறுப்பான உடற்பயிற்சிகள் ) செய்வது, யோகாசனம் செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி நம் உடல் வயதாவதையும் குறைக்கவும் இவை கை கொடுக்கும்.

    young sportive couple doing yoga fitness people summer park

    குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை கைவிட்டு நல்ல சத்துமிக்க ஆகாரங்களை உண்பது நம் உடல் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து உடைய நல்ல காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்களை நம் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது அவசியம். முடிந்தவரை ஒரு நாளில் – 24 மணி நேர கால இடைவேளையில் 8 முதல் 9 மணி  நேரத்திற்குள் உணவை உண்டுவிட்டு, மீதமுள்ள 16 முதல் 15 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    veggies

    மனிதனுக்கு ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் முக்கியமான ஒன்றாக இருந்து விட முடியாது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை இன்றிலிருந்து மேம்படுத்தி, நீண்ட நாட்கள்களுக்கு நல்ல ஆரோக்கியமான, சந்தோஷமான மற்றும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ தயாராகுங்கள்.

    Food Health Physical activity Sleep
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் யார் யார்? – முழு விவரம்
    Next Article கார் குண்டு வெடிப்பில் மேலும் 4 பேர் கைது; இதுவரை 6 பேரை கைது செய்தது NIA!
    Editor TN Talks

    Related Posts

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026

    காலையில் எழுந்ததும் போன் பார்க்கிறீர்களா?. மூளைக்கு வரப்போகும் ஆபத்து!. நிபுணர்கள் வார்னிங்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.