Close Menu
    What's Hot

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கார் குண்டு வெடிப்பில் மேலும் 4 பேர் கைது; இதுவரை 6 பேரை கைது செய்தது NIA!
    இந்தியா

    கார் குண்டு வெடிப்பில் மேலும் 4 பேர் கைது; இதுவரை 6 பேரை கைது செய்தது NIA!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Delhi Car
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் பயங்கரமாக வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக NIA நடத்திய விசாரணையில் காரை வெடிக்கச் செய்தது, மருத்துவர் உமர் நபி என்பதும், பின்னணியில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு- காஷ்மீரில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவப் பல்கலைக்கழக வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தநிலையில், டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்தநிலையில், இந்த தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கியதும் உமர் நபி ஓட்டிச் சென்ற காரின் உரிமையாளர் அமிர் ரஷீத் அலி மற்றும் ஜசீர் பிலால் வானி என்ற டேனிஸ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்தநிலையில், கார் குண்டு வெடிப்பு வழக்கில் முசாமில் ஷகீர், அதீல் அகமது, ஷாகீன் சயீத் மற்றும் முப்தி இர்பான் அகமது வாகே ஆகியோரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அனைவரையும் ஆஜர்படுத்திய NIA அதிகாரிகள், கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கும் முக்கிய பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியநிலையில், அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article90-95 வயதில் கூட நல்ல ஆரோக்கியத்துடன் இளமையாக வாழ முடியும் – எரிக் வெர்டின் நம்பிக்கை !!!
    Next Article காசாவில் மீண்டும் தாக்குதல்; 33 பேர் உயிரிழப்பு: போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல்!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    July 21, 2026

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.