Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“கட்சி பெயரைக் கூட களவாடி வைத்துள்ளார்கள்” – மல்லை சத்யாவை சாடிய துரை வைகோ
    அரசியல்

    “கட்சி பெயரைக் கூட களவாடி வைத்துள்ளார்கள்” – மல்லை சத்யாவை சாடிய துரை வைகோ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mallai Sathya Vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “கட்சி பெயரை கூட இன்னொரு கட்சியின் பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பேரைக் கூட எனக்கு சொல்லப் பிடிக்காது” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி காட்டமாக தெரிவித்தார்.

    அரியலூரில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டி: ஓர் அரசியல் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக்கள் வாக்களித்து தான் ஓர் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் பஞ்சாங்கத்தை பார்த்து இந்த கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்லி இருப்பது நகைப்புக்குரியது. நயினார் நாகேந்திரன் நல்ல ஒரு அரசியல்வாதி. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளார்.

    நெல்லுக்கான ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 22 சதவீதமாக ஈரப்பதத்தை கூட்டினால் தான் விவசாயிகள் நெல்லை விற்க முடியும்.

    ஆனால் இந்த கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வருகிறது. மத்திய குழுவினர் வருவார்கள், சுற்றுப்பயணம் செய்வார்கள். செய்தியாளர்களை சந்திப்பார்கள். கடைசியில் முடியாது என்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள். எனவே இக்கோரிக்கையை தமிழக அரசின் கோரிக்கையாகவோ, திமுகவின் கோரிக்கையாகவோ, நினைக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக மத்திய அரசு பார்க்க வேண்டும்.

    இதில், அரசியல் பார்க்கக் கூடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலமே பிஹாரில் வெற்றி பெற்றதாக அதிமுக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    எஸ்ஐஆரில் தவறு செய்து தான், பிஹாரில் வெற்றி பெற்றதை அதிமுகவினர் ஒத்துக் கொள்கிறார்களா?. அதேபோல் தமிழ்நாட்டில் தகுதியான வாக்காளர்களை நீக்கிவிட்டு தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்த்து நாம் வெற்றி பெறுவோம் என அதிமுக தலைமை நினைக்கிறதா?.

    பிஹார் வெற்றிக்கு எஸ்ஐஆர் மட்டும் காரணம் அல்ல. பிஹார் மாநில நிதியை தேர்தலுக்காகக் கொட்டி உள்ளார்கள். மாநில அரசின் நிதியை விரயம் செய்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தமிழக அரசு கண்காணிக்கிறது. ஆனால் மழைக்காலங்களில் இப்பணியை மேற்கொள்வது தான் பிரச்சினையாக உள்ளது.

    மழைக்காலங்களில் மாவட்ட நிர்வாகமோ, வருவாய் துறையினரோ மழையினால் ஏற்படும் பாதிப்பை பார்ப்பார்களா, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வார்களா என்பது தெரியாமல் உள்ளது.

    எஸ்ஐஆர் என்பது ஒன்று முதல் மூன்று வருட காலத்தில் நடக்க வேண்டியது. ஒரு மாதத்தில் நடத்துவதில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

    எந்த நோக்கத்தோடு எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கமே அடிபட்டு விடும். அரசியல் காரணங்களுக்காக மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டுள்ளது என பாஜக மூத்த நிர்வாகியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஆட்சி மாறினால் இத்திட்டம் கொண்டு வருவோம் என்பதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

    மதுரை, கோவை மட்டுமல்ல திருச்சிக்கும் எப்போது மெட்ரோ வரும். 20 லட்சம் மக்களுக்கு குறைவாக உள்ளதால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என எங்கள் தலைமையிடம் கூறியுள்ளோம்.

    இதில் எங்கள் தலைமை, கூட்டணி தலைமை, கூடி முடிவெடுப்பார்கள். கூட்டணி தலைமை எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எல்லா இயக்கத்துக்கும் தனிப்பட்ட சின்னம் உண்டு.

    அதில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அதனை எங்கள் தலைமையும், கூட்டணி தலைமையும் முடிவெடுப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும், மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் பெயர் மற்றொரு நபர் பதிவு செய்த கட்சி பெயர் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பெயரைக் கூட எனக்குச் சொல்லப் பிடிக்காது” என்றார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மெட்ரோ ரயில் திட்ட பின்னடைவுக்கு திமுக அரசே காரணம்” – செல்லூர் ராஜூ
    Next Article ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க முயற்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சீமான் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    July 18, 2026

    தவெகதானே ஆளும்கட்சி; அதைத்தான் விமர்சிப்போம் – ராஜேந்திர பாலாஜி

    July 18, 2026

    சந்தேகம் கிளப்பும் அதிமுக எம்.பி இன்பதுரை – தெளிவுபடுத்துமா திமுக?

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.