Close Menu
    What's Hot

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    தமிழக மக்களே உஷார்..! 5 நாட்களுக்கு வெளியே வராதீர்கள்..! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“மெட்ரோ ரயில் திட்ட பின்னடைவுக்கு திமுக அரசே காரணம்” – செல்லூர் ராஜூ
    அரசியல்

    “மெட்ரோ ரயில் திட்ட பின்னடைவுக்கு திமுக அரசே காரணம்” – செல்லூர் ராஜூ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sellur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “2011-ம் ஆண்டு மக்கள் தொகையை குறிப்பிட்டு திட்ட அறிக்கையை தவறாக தயார் செய்ததே மெட்ரோ ரயில் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு முக்கியக் காரணம்” என்று திமுக அரசு மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சியில் வசிக்கும்  மக்கள் இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு தூய்மையான குடிநீர் குடிக்கவும், தாராளமாக வீட்டு உபயோகத்துக்கு தண்ணீரை பயன்படுத்தவும் அதிமுக ஆட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    அதுபோல், மாரியம்மன் தெப்பக்குளத்தை தூர்வாரி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து 40 ஆண்டுக்குப் பிறகு நிரப்பினோம்.

    வைகை ஆற்றில் இரண்டு தடுப்பணைகளை கட்டி நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கினோம். திருமலை நாயக்கர் மகாலை, புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை கொண்டு வந்தோம்.

    பொதுவாக ஒரு திட்டத்துக்கு திட்ட அறிக்கை அனுப்பும்போது அதை அரசுகள் பல விளக்கங்கள், திருத்தங்கள் கேட்டு திருப்பி அனுப்புவது வழக்கமான நடைமுறைதான். ஆனால், ஏதோ கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்விட்டது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி திமுக தேர்தல் ஆதாரம் அடைய பார்க்கிறார்கள்.

    ஒரு மெட்ரோ திட்டத்துக்கு எதற்கு உங்களால் ஒரு சரியான புள்ளி விவரங்களை பெற்று திட்ட அறிக்கை தயார் செய்ய முடியவில்லை.

    2011-ம் ஆண்டில் குறிப்பிடப்பட்ட மக்கள் தொகையையும் தவறான வழித்தடங்களையும் மெட்ரோ ரயில் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உள்ள மக்கள் தொகையை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை செய்துவிட்டு, காயமும் இருக்கக் கூடாது, கல் எரிந்தது மாதிரி இருக்க வேண்டும் என்பதுபோல் மதுரை, கோவை மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.

    அன்டை மாநிலமான கேரளா சரியான திட்ட அறிக்கையை தயார் செய்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கி விட்டனர்.

    கலைஞர் நூலகத்தை வேகமாக கட்டி திறந்துவிட்டனர். ஆனால், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுக அக்கறை காட்டுவதில்லை. அதிமுக ஆட்சியில்தான் மெட்ரோ ரயில் திட்டம் வரும். முதல்வர் வந்து மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    மேலமடை திட்டம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் முதல்வர் திறந்து வைக்கிறார். இவர்கள் இந்த ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மதுரை இந்த ஆட்சியில் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுபாய் ‘ஏர் ஷோ’வில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து – விமானி உயிரிழப்பு
    Next Article “கட்சி பெயரைக் கூட களவாடி வைத்துள்ளார்கள்” – மல்லை சத்யாவை சாடிய துரை வைகோ
    Editor TN Talks

    Related Posts

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    July 17, 2026

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    July 17, 2026

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

    கையில் சூலாயுதத்துடன் அம்மன் கெட் அப்பில் ஜோதிமணி… கரூரில் பரபரப்பாகும் போஸ்டர்

    தமிழக மக்களே உஷார்..! 5 நாட்களுக்கு வெளியே வராதீர்கள்..! எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.