Close Menu
    What's Hot

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  
    Featured

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி கோவில் நிலம் மோசடி விற்பனையில் சதி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக,  தவெக அமைச்சர்கள் யாரைக் காப்பாற்றுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.

     சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :-

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் மோசடி பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர்கள் இருவர் முன்னுக்குப் பின் முரணாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது. இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    தனியார் வசம் இருந்த இந்த இடம் கடந்த திமுக ஆட்சியில் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைகக்ப்பட்டு பக்தர்கள், பொதுமக்களின் வாகன நிறுத்தமாக இருந்தது.

    கோயில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வாகன நிறுத்தும் நிலத்தை தனியார் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    பினாமி மூலமாக இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

    அறியாமையின் காரணமாக இதனை அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் கூறுகிறார்.

    விசாரணைக்கு முன்பே அமைச்சர் தானாக முன்வந்து இதனைச் சொல்வதன் மூலம் குற்றவாளியை காப்பாற்ற அமைச்சர் முற்படுவது தெரிகிறது.

    ஜூலை 2ஆம் தேதி  இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 3-ஆம் தேதி இந்த இடத்தைப் பத்திரப்பதிவு செய்ய வேறு இருவர் ஆவணங்கள் அளித்ததை, சார் பதிவாளர் ஏற்க மறுத்து நிறுத்தி வைத்ததோடு, விடுமுறையில் சென்று விட்டார்.

    தொடர்ந்து 6ஆம் தேதி திங்களன்று பழனி சார்பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் விடுமுறையில் சென்ற நிலையில், பக்கத்து ஊர்களில் உள்ள சார் பதிவாளரை இங்கு வரவழைக்காமல் கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளரை வரவழைத்ததே அரசின் உள்நோக்கம்தான்.

    இதேபோல் நிலத்தை வாங்கியவர்களாகக் கூறப்படும் இருவரும் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு கூட நிலத்தை வாங்கும் வசதியற்றவர்கள் என நாங்கள் கண்டறிந்துள்ள நிலையில் அவர்கள் எப்படி 2 கோடி ரூபாய் அளவுக்கு நிலத்தை வாங்கினார்கள்?

    பழனி நிலவிவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரைக் கைது செய்த டூப் சீப் மினிஸ்டர் தலைமையிலான அரசாங்கம், ஏன் இன்னும் சார் பதிவாளரைக் கைது செய்யவில்லை?

    இந்துக்களுக்கு எதிரானதாகச் சித்தரிக்கப்படும் திமுக ஆட்சியில்   கோயில் நிலங்களைப் பாதுகாத்தோம். பழனியில் மொட்டை போடுவார்கள், ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி.

    இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அமைச்சர்கள் ஏன் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார்கள்? இதன் விசாரணை ஒழுங்காக நடைபெறாவிட்டால் திமுக நீதிமன்றத்துக்கு செல்லும்…

    இவ்வாறு அவர் கூறினார்.

    #ministers DMK palani temple Palani Temple Land Issue Political Allegation Tamil Nadu Politics temple land
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!
    Next Article சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    July 17, 2026

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.