Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»துபாய் ‘ஏர் ஷோ’வில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து – விமானி உயிரிழப்பு
    இந்தியா

    துபாய் ‘ஏர் ஷோ’வில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து – விமானி உயிரிழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tejas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

    துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான இன்று (நவ.21) இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.

    இந்நிலையில், தேஜாஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில், ‘துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான் கண்காட்சியின்போது இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

    உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப் படையின் தேஜாஸ் லகு ரக போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இந்நிலையில், தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதன் வீடியா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானமான தேஜாஸ், தனது முதல் விமானத்தை கடந்த 2001, ஜனவரி 4-ம் தேதி இயக்கியது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த உள்நாட்டுப் போர் விமானத்துக்கு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘தேஜாஸ்’ என பெயரிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நேருவின் எழுத்துக்கள் வரலாறு மட்டுமல்ல, அவை இந்திய மனசாட்சியின் பதிவு” – ராகுல் காந்தி
    Next Article “மெட்ரோ ரயில் திட்ட பின்னடைவுக்கு திமுக அரசே காரணம்” – செல்லூர் ராஜூ
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.