Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»“நேருவின் எழுத்துக்கள் வரலாறு மட்டுமல்ல, அவை இந்திய மனசாட்சியின் பதிவு” – ராகுல் காந்தி
    இந்தியா

    “நேருவின் எழுத்துக்கள் வரலாறு மட்டுமல்ல, அவை இந்திய மனசாட்சியின் பதிவு” – ராகுல் காந்தி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

    ‘ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ டிஜிட்டல் மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் இப்போது 100 தொகுதிகளின் முழு தொகுப்பாக ஆன்லைனில் உள்ளது. இதில் சுமார் 35,000 ஆவணங்கள் மற்றும் நேருவுடன் தொடர்புடைய சுமார் 3,000 விளக்கப்படங்கள் உள்ளன. அவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கின்றன.

    இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு. நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும், அவரது வார்த்தைகள் ஒரு சக்திவாய்ந்த திசைகாட்டியாக இருக்கின்றன.

    இந்த படைப்புகள் இப்போது டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. இது தேடக்கூடியது மற்றும் அனைவருக்கும் இலவசம் என்பதை சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது தொடர்ந்து விரிவடையும்.” என்று தெரிவித்து ஜவஹர்லால் நேரு டிஜிட்டல் ஆவணக் காப்பகத்தின் இணைப்பைப் பகிர்ந்து கொண்டார்.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மைகள் எப்போதும் உண்மைகள்தான், உங்கள் விருப்பங்களின் காரணமாக அவை மறைந்துவிடாது. ஜவஹர்லால் நேரு பற்றிய வரலாற்றை வேண்டுமென்றே திரித்து, தவறான தகவல்கள் பரப்பப்படும் ஒரு சகாப்தத்தில், உண்மையைக் கண்டறிய அவரின் எழுத்துக்களை டிஜிட்டல் மயமாக்குவது மதிப்புக்குரியது. nehruarchive.in நேரு ஆவணக் காப்பகம் இப்போது டிஜிட்டலில் கிடைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேகப்பந்து வீச்சின் சொர்க்கம்: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் சரிவு!
    Next Article துபாய் ‘ஏர் ஷோ’வில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து – விமானி உயிரிழப்பு
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?

    June 1, 2026

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.