Close Menu
    What's Hot

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    மகளை ரேப் செய்தவருக்கு தூக்குத் தண்டனை! நெல்லை கோர்ட் தீர்ப்பு

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»துபாயில் தேஜஸ் விமானம் விபத்து: சாகச நிகழ்ச்சியில் சோகம்!
    இந்தியா

    துபாயில் தேஜஸ் விமானம் விபத்து: சாகச நிகழ்ச்சியில் சோகம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tejas plane crashes in Dubai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம், துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்தியாவின் தரப்பில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் இடம் பெற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் வட்டமடித்தும், தலைகீழாக சுற்றியும் பறந்து, பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது. வானில் பறந்து சாகசம் நிகழ்த்திருக் கொண்டிருக்கும் விமானங்களை கூடியிருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காதநிலையில், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பலரின் செல்போன்களில் பதிவானது.

    விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய போது, அங்கு பெரும் புகை மண்டலம் எழுந்தது. போர் விமானம் விபத்துக்குள்ளானதையும், அதில் விமானி உயிரிழந்ததையும் இந்திய விமானப்படை உறுதி செய்தது. விமானியின்  உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

    இதனிடையே தேஜஸ் போர் விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நக்ரோட்டாவைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் என்பது தெரியவந்துள்ளது. விங் கமாண்டர் நமன் சியால் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். துணிச்சலான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி மிகவும் மன வேதனையையும், ஆன்மாவை நொறுக்குவதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நமது தேசம் ஒரு துணிச்சலான, கடமை உணர்வு கொண்ட விமானியை இழந்துவிட்டதாகவும் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன் சியால் ஐதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி உள்ளார். அவரது மனைவியும் இந்திய விமானப்படையில் மூத்த அதிகாரியாக உள்ளார். நமன் சியால் தந்தையும், இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் இந்த பவாரியாக்கள்?
    Next Article ஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
    Editor TN Talks

    Related Posts

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    December 24, 2025

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    December 24, 2025

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    மகளை ரேப் செய்தவருக்கு தூக்குத் தண்டனை! நெல்லை கோர்ட் தீர்ப்பு

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.