Close Menu
    What's Hot

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»காஞ்சியில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்: முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்!
    அரசியல்

    காஞ்சியில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்: முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TVKVijayTour10 2025 09 357530ed7beb459a0b88cee68bf9858b
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (நவ.23) காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத்தினரும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார்.

    அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டிய விஜய், மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயுத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து ‘மக்கள் பாதுகாப்புப் படை’யை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சியும் அளித்தார்.

    இந்நிலையில், சேலத்தில் இருந்து டிச.4-ம் தேதி முதல் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்க விஜய் முடிவு செய்தார். ஆனால் திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்புக் காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவன்முறையை தூண்டும் வகையில் வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து
    Next Article ஆஸ்திரேலிய பாட்மிண்டன்: அரை இறுதியில் லக்‌ஷயா சென்
    Editor TN Talks

    Related Posts

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    July 23, 2026

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    July 23, 2026

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.