Close Menu
    What's Hot

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நவ.26-ம் தேதி பொது வேலைநிறுத்தம்
    இந்தியா

    புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நவ.26-ம் தேதி பொது வேலைநிறுத்தம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்​திய அரசு அமல்​படுத்​தி​யுள்ள 4 புதிய தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் நவ.26-ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும்என மத்​திய தொழிற்​சங்​கங்​கள் கூட்​டாக அறி​வித்​துள்​ளன.

    இதுதொடர்​பாக ஐஎன்​டி​யுசி, ஏஐசிடி​யுசி, எச்​எம்​எஸ், சிஐடி​யு,தொமுச உள்பட 10 மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த 29 தொழிலா​ளர் நலச்சட்​டங்​களை நீக்​கி​விட்டு அவற்​றுக்கு பதிலாக புதி​தாக 4 தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களை மத்​திய அரசு உரு​வாக்கி அவற்றை நவ.21 முதல் அமல்​படுத்​தி​யுள்​ளது.

    தொழிலா​ளர் விரோத, முதலா​ளி​களுக்கு ஆதர​வான இந்த சட்​டங்​களை தன்​னிச்​சை​யாக நடை​முறைப்​படுத்​தி​யிருப்​ப​தற்கு மத்​திய தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழுசார்​பில் கடும் கண்டனத்தை தெரி​வித்​துக் ​கொள்​கிறோம்.

    நான்கு தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களும் நவ. 21 முதல் அமல்​படுத்​தப்​படும் என ஜனநாயக விரோத, தன்​னிச்​சை​யான அறிவிக்​கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறி​முறை​களை​யும் மீறும் செயல். இது தொழிலா​ளர் நலன்​களை முற்​றி​லும் சிதைத்​துள்​ளது.

    ஏற்​கெனவே உள்ள 29 தொழிலா​ளர்நலச்​சட்​டங்​களை நீக்​கி​விட்டுபுதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்களை இயற்​றும்போது தொடக்க நிலை​யிலேயே தொழிற்​சங்​கங்​களும், தொழிலா​ளர் நல கூட்​டமைப்​பு​களும் கடுமை​யாக எதிர்ப்பு தெரி​வித்​தன.

    கடும் எதிர்ப்பு இருந்த நிலை​யில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றியை தொடர்ந்து 4 தொழிலா​ளர் சட்​டத்​தொகுப்​பு​களை​யும் மத்​திய அரசு திடீரென அமல்​படுத்​தி​யுள்​ளது. இவை உழைக்கும் வர்க்​கத்​தினரின் நலன்​களுக்கு முற்​றி​லும் எதி​ரானவை. இந்​தச் சட்​டத்​தொகுப்​பு​களை தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரங்​களுக்கு எதி​ரான இனரீ​தியி​லான தாக்​குதலாகக் கருதுகிறோம்.

    இவை தொழிலா​ளர்​களை அடிமை​யாக்​கு​வதுடன் அவர்​களின் உரிமை​களை முற்​றி​லும் பறிக்​கும். புதிய சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிற்​சங்​கங்​கள்மற்​றும் தொழில் கூட்​டமைப்​பு​கள் சார்​பில் நவ.26-ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்தப் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​படு​கிறது.

    தொழிலா​ளர் விரோத சட்​டத்​தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிலா​ளர்​கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்ற வேண்​டும். அதோடு வரும்திங்​கட்​கிழமை முதல் வாயிற்​கூட்​டம், தெரு​முனைக் கூட்​டம்என எதிர்ப்பு நடவடிக்கை பணி​களில் ஈடுபட வேண்​டும். இந்த நான்கு சட்​டத்​தொகுப்​பு​கள் வாபஸ் பெறப்​படும்​வரை உழைக்​கும் மக்​கள் வலிமை​யுடன் போ​ராடு​வார்​கள் என்ற எச்​சரிக்​கையை மத்​திய அரசுக்கு விடுக்​கிறோம்​.

    இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனுஷ் சார் உங்க முகத்தில் அது இருக்கு ; இயக்குனர் கூறியதை மேடையில் போட்டுடைத்த தனுஷ் !!!
    Next Article மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    35 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!. மே.வங்க அமைச்சரவையின் பலம் 41 ஆக உயர்வு!

    June 1, 2026

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய UPI அம்சம் அறிமுகம்..!!

    June 1, 2026

    12-ஆம் வகுப்பு விடைத்தாள் கசிவு: தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    “வெட்கக்கேடு” சிங்கப்பெண் அதிரடி படை பிரிவு பெண் காவலருக்கே இந்த நிலைமையா?. நயினார் கண்டனம்!

    இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.