அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி t20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தொடங்கி மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை (மொத்தமாக 29 நாட்கள் ) நடைபெற இருக்கும் இத்தொடரில் மொத்தம் 40 போட்டிகள் அடங்கியுள்ளன.
20 அணிகள் பங்கேற்க இருக்கும் இத்தொடரை இந்திய மற்றும் இலங்கை இணைந்து நடத்த இருக்கிறது. மொத்தமாக எட்டு இடங்களில் (ஊட்டி மைதானம் ) நடைபெற இருக்கும் இத்தொடரில் மூன்று இடங்கள் இலங்கைக்கும் ஐந்து இடங்கள் இந்தியாவிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், எம்.ஏ. சிதம்பரம் மைதானம் (சென்னை), அருண் ஜெட்லி மைதானம் (புது தில்லி), வான்கடே மைதானம் (மும்பை), ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா) ஆர். பிரேமதாசா மைதானம் (கொழும்பு), சிங்கள விளையாட்டுக் கழக கிரிக்கெட் மைதானம் (கொழும்பு) மற்றும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் (கண்டி) ஆகிய எட்டு இடங்களில் இந்த தொடர் நடைபெற இருக்கிறது.
20 அணிகளும் நான்கு தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதியாகவும். சூப்பர் ஹிட் என்ற அந்த அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் எட்டு அணிகளில் நன்றாக விளையாடிய முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்குச் செல்லும். அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடக்கும்.

டி20 உலகக் கோப்பை குழுக்கள்:
குரூப் ஏ: இந்தியா, அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான்
குரூப் பி: ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்
குரூப் சி: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம்
குரூப் டி: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் முதலாம் ஆண்டுகளுக்கு இடையே பிப்ரவரி ஏழாம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்தியாவினுடைய முதல் போட்டி அமெரிக்காவுக்கு எதிராக அதே நாளில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரை வீரராகவும், 2024 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரை ஒரு கேப்டனாகவும் என்ற இந்தி வீரர் ரோஹித் சர்மா நடைபெற இருக்கும் இந்த 2026 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை தொடரின் குளோபல் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

https://x.com/ICC/status/1993543799390585235?t=7gRDRJDKpPoohRXnS9nQtw&s=19

இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மாவுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
