Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சிறுத்தைக்கு வைத்த கூண்டில் குடிபோதையில் சிக்கிய மனிதர்
    இந்தியா

    சிறுத்தைக்கு வைத்த கூண்டில் குடிபோதையில் சிக்கிய மனிதர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sruthai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறுத்​தைக்கு வைத்த கூண்​டில் குடி​போதை​யில் மனிதர் ஒரு​வர் சிக்​கிய சம்​பவம் உத்​தரபிரதேச மாநிலத்​தில் நடந்​துள்​ளது.

    உத்​தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்​டத்​தில் கடார்​னி​யா​காட்டில் சரணால​யம் உள்​ளது. சரணால​யத்தை ஒட்டியுள்ள கிராமங்​களில் அடிக்​கடி சிறுத்​தை, புலிகள் புகுந்து ஆடு, மாடு​களை கொன்று தின்​னும் சம்​பவம் நடந்து வந்​தது.

    கடந்த 26-ம் தேதி இரவு கடார்​னி​யாட் பகு​தி​யிலுள்ள ஒரு கிராமத்​தில் புகுந்த சிறுத்தை 55 வயதான சாந்​திதேவி என்ற பெண்ணை அடித்​துக் கொன்​றது. இதையடுத்து வனத்​துறை அதி​காரி​கள் ஆய்வு நடத்​தினர்.

    வனப்​பகு​தியை ஒட்​டி​யுள்ள இடத்​தில் இரும்​புக்​கூண்டை வைத்து சிறுத்​தையைப் பிடிக்க ஏற்​பாடு செய்​தனர். கூண்​டுக்​குள் ஆடு கட்டி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் காலை, அந்த இரும்​புக் கூண்​டுக்​குள் பிரதீப் என்​பவர் அடைபட்​டுக் கிடந்​தார். வனத்​துறை அதி​காரி​கள் கூண்​டுக்​குள் இருந்து அவரை மீட்​டனர்.

    பின்​னர் விசா​ரித்​த​போது அவர் குடி​போதை​யில் இரும்​புக்​கூண்​டில் சிக்​கியது தெரிய​வந்​தது. இரும்​புக்​கூண்​டுக்​குள் யார் நுழைந்​தா​லும் உடனடி​யாக கூண்​டுக்​கதவு​கள் தானி​யங்​கி​யாக மூடிவிடும். ஆனால், கூண்​டில் இருந்த ஆட்டை பிரதீப் திருட வந்து சிக்​கி​யிருக்​கலாம் என்று சந்​தேகம் கொண்​டனர்.

    இதுகுறித்து பிரதீப் கூறும்​போது, “அங்கு என்ன நடக்​கிறது என்று தெரிந்து கொள்ள வந்​தேன். அப்​போது திடீரென கூண்​டுக்​குள் அடைபட்​டேன். கூண்​டுக்​குள் சிக்​கிக் கொண்​டதும் சத்​தம் எழுப்​பினேன். அது யாருக்​கும் கேட்​க​வில்​லை. இதையடுத்​து, என்​னுடைய செல்​போன் மூலம் உதவிக்கு அழைத்​தேன். கிராம​ தலை​வருக்கு தகவல் தெரி​வித்து என்னை மீட்க ஏற்​பாடு செய்​தேன். பின்​னர் வனத்​துறை அதி​காரி​கள், போலீ​ஸார் வந்து என்னை மீட்​டனர்” என்​றார்.

    சிறுத்​தைக்கு வைத்த கூண்​டில் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சிக்​கியது அப்​பகு​தி​யில் பரபரப்​பாக​வும், நகைச்​சுவை​யாக​வும்​ பேசப்​பட்​டு வரு​கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
    Next Article டித்வா புயல் எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    Editor TN Talks

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.