Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»எஸ்ஐஆர் படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    இந்தியா

    எஸ்ஐஆர் படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sir
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4ஆம் தேதி இந்த பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஒரே மாதத்தில் இந்த பணிகளை முடிப்பதற்காக, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது உதவி மையத்திலோ சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

    கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அட்டவணையை திருத்தி புதிய அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நடைப்பெறும். அதன் பிறகு டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல் மற்றும் வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைப்பெறும்

    இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்படும். பின்னர் அவை டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டை இலக்கத்தில் பாஜக வெல்லும்: நயினார் நாகேந்திரன் உறுதி
    Next Article சத்தீஸ்கரில் டிஜிபி, ஐஜி.க்கள் மாநாடு.. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
    Editor TN Talks

    Related Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    June 16, 2026

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.