Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சத்தீஸ்கரில் டிஜிபி, ஐஜி.க்கள் மாநாடு.. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
    இந்தியா

    சத்தீஸ்கரில் டிஜிபி, ஐஜி.க்கள் மாநாடு.. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm dgp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் நடை​பெற்று வரும் டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜி.க்​கள் மாநாட்​டுக்கு பிரதமர் மோடி  தலைமை தாங்​கி​னார்.

    அனைத்து மாநில டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜிக்​கள் பங்​கேற்​கும் 60-வது மாநாடு சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் உள்ள ஐஐஎம் வளாகத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இதை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தொடங்கி வைத்​தார். 3 நாட்​கள் நடை​பெறும் இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்​டார். இதில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், உளவுத்​துறை தலை​வர் தபன் குமார் தேகா, சிபிஐ இயக்​குநர் பிர​வீன் சூட் உட்பட காவல்​துறை உயர் அதி​காரி​கள் பலர் கலந்து கொண்​டனர்.

    இந்த மாநாட்​டில் பங்​கேற்​றது குறித்து எக்ஸ் தளத்​தில் கருத்து தெரி​வித்த பிரதமர் மோடி, ‘‘ராய்ப்​பூரில் நடை​பெற்ற டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜி.க்​கள் மாநாட்​டின் முதல் நாளில் நாட்​டின் பாது​காப்பு அம்​சங்​கள் குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. காவல் துறை​யில் பின்​பற்​றப்​படும் சிறந்த நடை​முறை​களை​யும், புதுமை கண்​டு​பிடிப்​பு​களை​யும் பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு மிகச்​சிறந்த இடம்’’ என குறிப்​பிட்​டார்.

    இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பேசுகை​யில், ‘‘நக்​சல், வடகிழக்கு மற்​றும் ஜம்மு காஷ்மீர் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்வை மோடி அரசு அளித்​துள்​ளது. நக்​சல் பாதிப்பு மாவட்​டங்​களின் எண்​ணிக்கை வெகு​வாக குறைந்​து​விட்​டது. போதைப் பொருள் மற்​றும் அனைத்து வகை​யான குற்​றங்​களை ஒழிக்க காவல்​துறை முழு வீச்​சில் செயல்பட வேண்​டும். உளவுத் தகவல்​கள் துல்​லிய​மாக இருக்க வேண்​டும். அனைத்து மாநில காவல்​துறை​களும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். காவல்​துறையை நவீன​மாக்க புதிய குற்ற சட்​டங்​களை பயன்​படுத்​த வேண்​டும்​’’ என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்ஐஆர் படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    Next Article டிட்வா புயல் தாக்கம்: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் ரத்து
    Editor TN Talks

    Related Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    June 16, 2026

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.