Close Menu
    What's Hot

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றம்: கடல் அரிப்பால் சின்ன காலாப்பட்டு துண்டிப்பு!
    தமிழ்நாடு

    புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றம்: கடல் அரிப்பால் சின்ன காலாப்பட்டு துண்டிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயலால் புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 15 மீனவ கிராமங்களிலும் படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்தில் உள்ள நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கடல் நீர் சூழ்ந்து சின்ன காலாப்பட்டு கிராமம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வருகிறது. இந்நிலையில், இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 7.53 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் புதுச்சேரி கடற்கரைச் சாலை மூடப்பட்டது. இது தெரியாமல் ஆர்வமாக பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்த நிலையில்  போலீஸார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

    டிட்வா புயலின் தாக்கம் மீனவ கிராமங்களில் அதிகம் இருந்தது. குறிப்பாக கனகசெட்டிக்குளம் தொடங்கி முள்ளோரை வரை 15 கிராமங்களிலும்  படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாக சோலைநகர் பகுதியில் மழைநீர் புகுந்தததால் படகுகளை பாதுகாப்பான மேடான பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.

    மழை காரணமாக சின்ன காலாப்பட்டு பகுதியில் இருந்து ஊருக்குச் செல்லும் பிரதான சாலையில் கடல் நீரால் அரிப்பு ஏற்பட்டு  கிராமம் துண்டிக்கப்பட்டது. கடல் அரிப்பு பிரதான சாலை உடைந்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் 300 பேர் தவிக்கின்றனர்.

    இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், “நேற்று சாலை இருந்தது. காலையில் எழுந்து பார்த்தோம். சாலையை காணவில்லை. கடல் அரிப்பு அதிகமாக இருந்ததால் தூண்டில் முள் வளைவு கேட்டோம். அதை செய்யவில்லை. அதனால் தான் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

    குறிப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு டிராக்டர், ஜேசிபி இயந்திரம் செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

    டிட்வா புயலால் மழை தொடர்ச்சியாக பெய்வதால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வெறிச்சோடியது. கடல் சீற்றம் அதிகரித்து,  அதிக உயரத்துக்கு அலை அடிக்கிறது. பழைய துறைமுகத்திலுள்ள பழைய பாலம் வரை அலையின் வேகம் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
    Next Article நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது டெல்லி காவல்துறை புதிய எஃப்ஐஆர்
    Editor TN Talks

    Related Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.