Close Menu
    What's Hot

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வலுவிழந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரும் டிட்வா புயல்
    தமிழ்நாடு

    வலுவிழந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரும் டிட்வா புயல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”புதுச்சேரி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் வடதிசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

    அப்போது புயலுக்கும், வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 80 கிமீ ஆக இருந்தது. டிட்வா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது டிட்வா புயலின் மைய பகுதி வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்ச தூரம் இன்று 30ம் தேதி நவம்பர், மாலை, 30 கி. மீ. -ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    டிட்வா புயலானது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. வலுகுறைந்து வடக்கு நோக்கி நகர்ந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும். டிட்வா புயல் தாக்கத்தினால் திருவள்ளூர், ராணிப்பேட்டை 2 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வாய்ப்புள்ளது. நாளை மழையின் தாக்கம் குறைந்து விடும். வருகிற 6 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இன்று வங்கக்கடலில் அதிகபட்சமாக 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தென் ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுவை மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோர மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    நாளை காலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை 17 இடங்கள், கனமழை 65 இடங்களில் பெய்துள்ளது” என கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சிந்தனை மாற்றமே தேவை” – ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!
    Next Article தயாராகும் ‘அவதார் 3’-ம் பாகம்… படம் பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம்
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    June 20, 2026

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    June 20, 2026

    மழைக்கால சோதனை.. சேறும் சகதியுமாக மாறிய ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்..!! அல்லல்படும் மக்கள்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வகுப்பறையில் அரசியல் செய்த தவெக நிர்வாகிகள்..!! பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு அட்ராசிட்டி..!!

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் யுவராஜ் சிங்!. கங்குலி கூட்டணியுடன் அதிரடி மாற்றங்கள்!.

    குடியரசுத் தலைவருக்கு 68வது பிறந்தநாள்..!! துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    வெப்பம் குறையும்; ஈரப்பதம் நிலவும் – சென்னை மக்களுக்கு ஜில்லுனு ஒரு செய்தி

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் இன்று..! தலைவர்கள் வாழ்த்து..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.