டிசம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும். அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
இந்த நேரத்தில், வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் பிராந்திய விடுமுறை நாட்காட்டியின்படி தங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவது அவசியம்.
இருப்பினும், UPI சேவைகள், நெட் பேங்கிங், ATM மற்றும் பிற வசதிகள் உட்பட ஆன்லைன் வங்கி சேவைகளை பெற முடியும்.. எந்தவொரு வருகையையும் திட்டமிடுவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு தங்கள் உள்ளூர் கிளைகளை அழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
டிசம்பர் மாதத்திற்க்கான மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்கள்: டிசம்பர் 1 திங்கள் – மாநில ஸ்தாபக தினம். இட்டாநகர், கோஹிமாவில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 3 (புதன்): புனித பிரான்சிஸ் சேவியர் விழா. பனாஜியில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை, வாராந்திர விடுமுறை
டிசம்பர் 12 (வெள்ளி): பா டோகன் நெங்மிஞ்சா சங்மா நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 13 (சனிக்கிழமை) இரண்டாவது சனிக்கிழமை.
டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை.
டிசம்பர் 18 (வியாழன்): யு சோசோ தாம் நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 19 (வெள்ளி): கோவா விடுதலை நாள். பனாஜியில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 20 (சனி): லோசூங்/நாம்சூங். கேங்டாக்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர நாடு தழுவிய விடுமுறை
டிசம்பர் 22 (திங்கள்): லோசூங்/நாம்சூங். கேங்டாக்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 24 (புதன்): கிறிஸ்துமஸ் ஈவ். ஐஸ்வால், கோஹிமா, ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 25 (வியாழன்): கிறிஸ்துமஸ். நாடு முழுவதும் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 26 (வெள்ளி): கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். ஐஸ்வால், கோஹிமா, ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 27 (சனி): கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். கோஹிமாவில் மட்டும் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர நாடு தழுவிய விடுமுறை
டிசம்பர் 30 (செவ்வாய்): யு கியாங் நங்பா நினைவு தினம். ஷில்லாங்கில் வங்கிகள் மூடல்.
டிசம்பர் 31 (புதன்): புத்தாண்டு ஈவ். ஐஸ்வால் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடல்.
