Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»SIR உள்பட எந்த விவாதத்திற்கும் தயார்!: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
    இந்தியா

    SIR உள்பட எந்த விவாதத்திற்கும் தயார்!: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kiran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனையை எழுப்பி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 01) தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியது.  மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை மூத்த உறுப்பினர்கள் உரையாற்றினர். மக்களவையில் மறைந்த 5 உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து கேள்வி நேரத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கினார். ஆனால் SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை கூடிய போதும், அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ளாமல், வெளிநடப்பு செய்தனர்.

    இதனிடையே SIR மீதான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். தங்களுக்கு  பதிலளிக்க அவகாசம் தரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எந்தவொரு விஷயத்திலும் விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்! ஐகோர்ட் கிளை அனுமதி
    Next Article இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்!- பிரதமர்மோடி
    Editor TN Talks

    Related Posts

    சிம்லாவில்  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

    June 21, 2026

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 கடற்படை போர்க்கப்பல்கள்; நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

    June 21, 2026

    ₹75 லட்சம் கோடி இறக்குமதி: இந்தியாவின் பளபளக்கும் ஜிடிபி வளர்ச்சியும் மறைந்திருக்கும் பலவீனமும்!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.