Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிதம்பரம் அருகே மழைநீரில் மூழ்கி 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
    தமிழ்நாடு

    சிதம்பரம் அருகே மழைநீரில் மூழ்கி 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rnd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர் கன மழையால், சிதம்பரம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கின. பிச்சாவரம் உப்பனாற்றில் ஆகாயத் தாமரைகள் அடர்ந்துள்ளதால் வெள்ள நீர் வடியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    சிதம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள கணக்கரப்பட்டு, நற்கவந்தன்குடி, குமாரமங்கலம், வசபுத்தூர், நடராஜபுரம், உத்தம சோழமங்கலம், பிச்சாவரம், கீழப்பெரும்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர் கள் மழை நீரில் முழ்கியுள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15,16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதில் சற்று பாதிப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் மழை நீர் தேங்கத் தொடங்கியது.

    இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ‘டிட்வா’ புயலால் பெய்த கனமழையால் பாதிப்பு மேலும் அதிகரித்தது. சிதம்பரம் சுற்று வட்டார விளை நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,“20 நாட்களுக்குள் அடுத்தடுத்து பெய்த இரு கனமழைகள் பாதிப்பை அதிகமாக்கி இருக்கிறது. சிதம்பரம் மேற்கு பகுதியில் உள்ள வீராணம் ஏரியின் வடிகாலாக இருக்கும் வெள்ளியங் கால் ஓடை வழியாக வடியக்கூடிய தண்ணீர் பிச்சாவரம் உப்பனாற் றில் வடிந்து வருகின்றன.

    இங்கு ஆகாயத்தாமரைகள் அடர்ந்து இருப்பதால் மழை நீர் சரியானபடி வெளியேற முடியாமல் விளைநிலங்களில் புகுந் துள்ளது. பிச்சாவரம் உப்பனாற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    கடன் வாங்கி, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்தத் தொகையை முழுமையாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.சிதம்பரம் அருகே கணகரப்பட்டு கிராமத்தில் மழைநீரால் முழ்கியிருக்கும் நெற்பயிர்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் 2-வது நாளாக கனமழை
    Next Article ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. கும்பகோணத்தில் கோலாகலம்
    Editor TN Talks

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.