Close Menu
    What's Hot

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»தேவ்தத் படிக்கல் சதம்… கர்நாடகாவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு
    விளையாட்டு

    தேவ்தத் படிக்கல் சதம்… கர்நாடகாவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    crici tnk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

    இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்ற குரூப் டி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை வென்ற தமிழ்நாடு அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணிக்கு சரத் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் அகர்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்திய சரத் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விகெட்டை இழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயரும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்மாறன் ரவிச்சந்திரன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 102 ரன்களைச் சேர்த்தார்.

    அவருடன் இணைந்து விளையாடி வந்த ஸ்மாறன் ரவிச்சந்திரன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் 46 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் கர்நாடகா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 245 ரன்களைக் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணிக்கு அமித் சாத்விக் – துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாத்விக் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 8 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா 29 ரன்களுக்கும், நாராயண் ஜெகதீசன் 21 ரன்களிலும், ராஜ் குமார் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

    மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களாலும் கர்நாடகாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக தமிழ்நாடு அணி 14.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடகா தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால், பிரவீன் தூபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதன் மூலம் கர்நாடகா அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கர்நாடகா அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அணி தங்களின் மூன்றாவது தோல்வியைத் தழுவி 4 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்கு தொடர்ந்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை
    Next Article கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
    Editor TN Talks

    Related Posts

    நாட்டுக்கே பெருமை; யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?. பல சோதனைகளை கடந்து வந்த சாதனை பயணம்!.

    July 27, 2026

    காமன்வெல்த் 2026!. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!. தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி அசத்தல்!

    July 27, 2026

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.