இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் பொது தேர்தலுக்கான சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) தமிழக முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள நிறைய இடங்களில் சிறப்பு முகாம்கள் அனைத்தும், வாக்கு சாவடி நிலை அலுவலகங்கள் மூலமாகவும் படிவங்களை பொதுமக்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்களில் நிறைய பேர் தங்களுக்கு கிடைத்த படிவங்களை நிரப்பி முகாம்களிலும் வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடமும் கொடுத்து வருகின்றன.
இந்த புதிய திட்டம் தேவையில்லாத ஒன்று என்று தமிழகத்தில் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பேட்டி அளித்திருக்கிறார்.
மத்திய அரசும் , இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளுகிறது. வேலைக்காக பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது முறையல்ல. அவர்களுக்கு வாக்குரிமை தமிழகத்தில் வழங்கக் கூடாது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய அரசையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து நாளை (டிசம்பர் 3, 2025) காலை 8 மணி முதல் சாகும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்”, என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
SIR ஐ எதிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ், த வெ க சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிராக தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
