Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு குழந்தை பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
    அரசியல்

    வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு குழந்தை பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த பழனி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தையை இழந்து வாடும் பழனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மேல்பாதி கிராமத்தில் உள்ள பொத்தேரியில் நீர் நிரம்பி, வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் வழியாக பாளையங்கோட்டை பெரிய ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    அந்த வெள்ள வடிகால் வாய்க்காலின் ஓரத்தில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளது. பொத்தேரியில் இருந்து வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்த ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் மதகு சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால், அதிகப்படியான நீர் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது.

    கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாய்க்காலில் ஓடியதால் தான் அதில் தவறி விழுந்த குழந்தை வேகமாக அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டது. சேதமடைந்த மதகை சரி செய்ய வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை அனைவரிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், ஐந்தாண்டுகளாகியும் மதகு சரி செய்யப்படாததால் அப்பாவி குழந்தை உயிரிழந்துள்ளது.

    இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொத்தேரியின் சேதமடைந்த மதகை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்தப் பதிவில் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30 நாள்கள் சிறையில் இருந்தால் இனி அரசு பதவி வகிக்க முடியாது… வருகிறது புது சட்டம்
    Next Article சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் – மன்சூர் அலிகான் பரபரப்பு !!!
    Editor TN Talks

    Related Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    July 29, 2026

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.