Close Menu
    What's Hot

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»டிசம்பர் 3- இன்றைய ராசிபலன்
    ராசிபலன்

    டிசம்பர் 3- இன்றைய ராசிபலன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rssi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுண்டு. வியாபார போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

    ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

    மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு.

    கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். ஆன்மிக பயணத்தால் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் கிட்டும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

    சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். உடன் பிறந்தவர்களின் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.

    கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.

    துலாம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். மகனின் எதிர்காலத்தை நினைத்து வருந்துவீர். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரம் சிறக்கும்.

    விருச்சிகம்: பணவரவு ஓரளவு திருப்தி தரும். பழைய கடன்களை பைசல் செய்வீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். புதிய பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக அமைந்து லாபம் பார்ப்பீர்.

    தனுசு: பூர்வீக சொத்து வழக்கு இழுபறியாக வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களுடன் பேசிப் பார்ப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலத்தில் பணிச்சுமை குறையும்.

    மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்.

    கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். வாகனத்தை மாற்றுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் கிட்டும்.

    மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக நிலம், வீடு ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமணமகள் ஏன் மணமகனின் வலது பக்கம் அமர்ந்திருக்கிறார் தெரியுமா?
    Next Article 13,000 ரன் வீரர்கள் பட்டியல்… இடம்பிடிப்பாரா ஹாக்?
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.