Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” – விஜய் மீது உதயநிதி தாக்கு
    அரசியல்

    “நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” – விஜய் மீது உதயநிதி தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என சிலர் நினைக்​கின்​ற​னர் என்று தவெக தலை​வர் விஜய்யை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மறை​முக​மாக தாக்​கிப் பேசி​னார்.

    திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி​யின் 93வது பிறந்​த​நாளை முன்​னிட்டு அவரது இல்​லத்​துக்கு நேரில் சென்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அவருக்கு வாழ்த்து தெரி​வித்​தார். முதல்​வ​ருடன் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், அன்​பில் மகேஸ் ஆகி​யோர் உடன் இருந்​தனர். மேலும் சென்னை வேப்​பேரி​யில் உள்ள பெரி​யார் திடலில் நடை​பெற்ற பிறந்​த​நாள் விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று வீரமணிக்கு பொன்​னாடை அணி​வித்து புத்​தகம் வழங்கி வாழ்த்து தெரி​வித்​தார்.

    இந்​நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது:

    பெரி​யா​ரின் கொள்கை பேர​னாக இங்கே நான் வந்​துள்​ளேன். பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து திரா​விட கழகத்​தினர் இங்கே வந்​துள்​ளனர். உங்​களை பார்க்​கும் போது எனக்கு வியப்​பாக உள்​ளது. ஒரு சிலர் நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என நினைக்​கின்​ற​னர். ஆனால் ஒரு கவுன்​சிலர் பதவி கூட வேண்​டாம். எங்​களுக்கு கொள்​கை, சமு​தாய தொண்டு தான் முக்​கி​யம் என இத்​தனை ஆண்​டு​கள் பணி​யாற்​றுகின்​ற​னர்.

    83 ஆண்​டு​கால பொது​வாழ்க்கை வாயி​லாக திரா​விட இயக்​கத்​தின் நேரடி வரலாற்று சாட்​சி​யாக திரா​விடர் கழக தலை​வர் வீரமணி உள்​ளார். இன்று பெரி​யார் கொள்​கை​களை நாடு முழு​வதும் பரவி உள்​ளது, ஏன் உலகமே கொண்​டாடி வரு​கிறது, இன்​றைய தலை​முறை​யினர் பெரி​யாரை படிக்க ஆரம்​பித்​துள்​ளனர், கொள்​கை​களை ஏற்​றுக்​கொள்ள தொடங்​கி​யுள்​ளனர்.

    இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் சேகர்​பாபு, மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ மற்​றும் திரா​விடர் கழக நிர்​​வாகிகள் கலந்து கொண்​டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையன் தவெக-வில் இணைய அமைச்சர் சேகர்பாபுதான் காரணம் – நயினார் நாகேந்திரன் புதுத் தகவல்
    Next Article மாற்றுத் திறனாளிகள் வாழ்வு சிறக்க பாடுபடுவோம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.