Close Menu
    What's Hot

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘Dude’ படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்!- சமரசம் காரணமாக வழக்கு முடித்து வைப்பு
    தமிழ்நாடு

    ‘Dude’ படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்!- சமரசம் காரணமாக வழக்கு முடித்து வைப்பு

    Editor web1By Editor web1December 3, 2025Updated:December 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dude
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

    தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி தீபாவளிக்கு வெளியான  Dude  திரைப்படத்தில், பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,  இரண்டு பாடல்களையும்  பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நடைபெற்ற விசாரணையில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    பாடல்களின் உரிமை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் Dude திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது.

    இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார். அவரது பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, Dude படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீண்டும் இன்று (டிச. 3) விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே  சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் ஏ.சரவணன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
    Next Article ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக அளவிடும் பணி 99% நிறைவு!’
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.