Close Menu
    What's Hot

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கோலி, கெய்க்வாட் சதம் வீண்… இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி
    விளையாட்டு

    கோலி, கெய்க்வாட் சதம் வீண்… இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rohtt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கோலி, கெய்க்வாட் ஆகியோர் சதமடித்த போதிலும் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

    ராய்ப்பூரில் இன்று தெ.ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனினும் 3வது விக்கெட்டுக்கு கோலி, கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக கோலி விளையாடினார். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து சதத்தை பதிவு செய்தனர்.

    கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோலி 90 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோலியின் 53வது சதமாகும். அதேபோல், சர்வதேச அரங்கில் அவரின் 84வது சதமாகும்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 39.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை சேர்த்திருந்தது.

    இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 66 ரன்களை குவித்தார்.

    50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை கவனத்தில் கொண்டு தெ.ஆப்பிரிக்க அணி விளையாடியது.

    ஆரம்பம் முதல் அதிரடியாக தென்னாப்பிரிக்க வீரர்கள் விளையாடினர். பிரமாண்ட ஸ்கோரை நினைத்து கவலைப்படாமல், அவர்கள் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். நாலாபுறமும் இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிய தெ.ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கரம் 110, பவுமா 46, ப்ரீட்ஸ்க் 68, ப்ரவீஸ் 54 ரன்களை குவித்தனர்.

    இதையடுத்து வந்த வீரர்களும் அதிரடியில் கலக்கவே, தென்னாப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வென்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா, தெ.ஆப்பிரிக்கா ஆகியவை தலா ஒரு வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 1-1 என்று சமநிலை வகிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
    Next Article நுடெல்லா அதிக அளவில் உண்பவரா நீங்கள் ; அப்போ இத கண்டிப்பா படியுங்க !!!
    Editor TN Talks

    Related Posts

    மேட்ச் தோற்றாலும் ‘மாஸ்’ காட்டிய சிஎஸ்கே!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 6, 2026

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 5, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.