Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கட்டாயப் படிப்பு பட்டம் அல்லது டிகிரி தேவையில்லை – ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து !!!!
    இந்தியா

    கட்டாயப் படிப்பு பட்டம் அல்லது டிகிரி தேவையில்லை – ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து !!!!

    Editor web2By Editor web2December 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251204 130722
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் எப்பொழுதும் சற்று தொலைநோக்கு சிந்தனையுடன் இருப்பார். சமூக வலைதளங்களில் தன்னுடைய தொலைநோக்கு கருத்துக்களை பதிவிடுவது அவரது வழக்கம். அதன்படி தற்பொழுது இளைஞர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை தனது பதிவின் மூலம் கூறியிருக்கிறார்.

    ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்ட பதிவை பற்றி பார்ப்போம் :

    Screenshot 20251204 130745

    அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, தங்களுடைய தொழில் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வாறு தொழில் கற்றுக் கொண்ட அனைவரையும் முற்போக்கு மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட முதலாளிகள் தங்களுடைய கம்பெனியில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இது உண்மையில் மிகப்பெரிய விஷயம். இது சமுதாயத்தில் ஒரு புதிய சிந்தனையையும் கலாச்சாரத்தை உருவாக்கும்.

    ஒரு தொழிலில் அமர்வதற்கு கட்டாய படிப்பு தகுதி தேவையில்லை. கல்லூரி பட்டம் மற்றும் டிகிரி பெறுவதற்காக கடன் வாங்கி மற்றும் சொந்த செலவில் படித்து பணத்தை விரயம் செய்ய வேண்டாம். இதை மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவருடைய பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரிய கட்டாய படிப்பு பட்டமோ அல்லது டிகிரியோ தேவையில்லை. தொழில்திறன் இருந்தால் மட்டும் போதும். அப்படி தொழில் கற்றுக்கொண்டு தங்களுடைய சொந்த காலில் நிற்கும் இளைஞர்கள் சமுதாயத்தில் உள்ள கலாச்சாரத்தையும் அரசியலையும் மாற்றியமைப்பாளர்கள்.

    எங்களுடைய நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் ( வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது ) கட்டாயப்படுத்தி டிகிரி அல்லது பட்டம் தேவை என்கிற வார்த்தை இடம் பெற்றால், என்னுடைய HR துறையிலிருந்து அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். கட்டாய படிப்பு பட்டம் மற்றும் டிகிரி தேவை என்கிற வாசகத்தை நீக்கிவிட சொல்லி விடுவோம்.

    திருநெல்வேலியில் உள்ள எங்களது நிறுவனத்தில் 19 வயது கொண்ட இளைஞர்கள் இது அபாரமாக தங்களுடைய திறமையை காட்டிக்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய வேகம் அபாரமாக உள்ளது. அவர்களுக்கு ஈடு கொடுத்து உழைக்க நான் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது”, என்று ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய பதிவின் மூலம் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் தொழில்துறை முதலாளிகள் அனைவருக்கும் “ஒரு நிறுவனத்தில் பணிபுரிய கட்டாய படிப்பு பட்டம் அல்லது டிகிரி தேவையில்லை” என்கிற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

    Sridhar vembu Youngsters Zoho
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிசம்பர் மாத ராசி பலன்கள்.. உங்கள் ராசிக்கு எப்படி?
    Next Article தவெக வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Editor web2
    • Website

    Related Posts

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    June 19, 2026

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.