மேஷம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்படுவீர்கள். இன்றைய தினம் முழுவதும் குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிடுவீர்கள்.
ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். இதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க மனதிற்கு பிடித்தவர்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
மிதுனம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க சிரமப்படுவீர்கள். மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உங்கள் பிரச்சினைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்: உங்கள் கற்பனை திறன் அதிகரிக்கக்கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். இதனால், கௌரவம் அதிகரிப்பதுடன், முயற்சிக்கு பாராட்டும் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம்.
சிம்மம்: இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கலாம். பதட்டங்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்து பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். எனினும், பணிக்கும் வீட்டிற்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
கன்னி: குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும் அமைதியாக ஏற்றுக்கொண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
விருச்சிகம்: இன்று உங்களின் கவனமும், முயற்சியும் புது வியாபாரத்தின்மீது இருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை புறக்கணிக்க நேரிடலாம். உங்களின் முயற்சியும் வேலைகளும் திட்டமிட்டபடி நடக்காமல் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.
தனுசு: இன்று உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவர முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். ஆனால், நாளின் இறுதி பொழுதில் நன்மை உண்டாகும்.
மகரம்: நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்றால் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் உங்கள் வேலைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்தல் சிறந்தது. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அனுகூலமான நல்ல நாளாக அமைய வாய்ப்புள்ளது.
கும்பம்: நீங்கள் முற்காலத்தில் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தற்போது அடைந்த சாதனையை எண்ணி திருப்தி கொள்வதை தவிர்க்கவும். இன்னும் கடினமாக உழைத்தால் நற்பலன் கிடைக்கும்.
மீனம்: இன்று பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இடர்பாடுகள் நிறைந்த பணிகள் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம்.
