Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து… 5 பேர் பலியான சோகம்
    தமிழ்நாடு

    கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து… 5 பேர் பலியான சோகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    accc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆந்திராவில் இருந்து 5 ஐயப்ப பக்தர்கள் ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் ராமேசுவரம் நோக்கி வந்துள்ளனர். நீண்ட பயணத்தால் சோர்வடைந்த அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே  காரை நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது கார் ஒன்று ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7 பேருடன் வந்தது. அந்தக் கார் நின்று கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்த காரின் பின்புறம் மீது வேகமாக மோதியது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த காரில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலும், கீழக்கரையிலிருந்து காரை ஓட்டிவந்த ஓட்டுநர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேர் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயங்களுடன்  ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீஸார் விபத்தில் உயிரிழந்த கீழக்கரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முஷ்டாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமச்சந்திர ராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய ஐந்து பேரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2025ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியல்: 3ம் இடம் பிடித்த ‘கூலி’!
    Next Article யு.ஜி.சியின் மறைமுக இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது… அன்புமணி அறிக்கை
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.