Close Menu
    What's Hot

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»2026 தேர்தலில் தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி? பாஜகவுக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி
    தேர்தல் 2026

    2026 தேர்தலில் தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி? பாஜகவுக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvksss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் இதே கூட்டணி தொடர பாஜக விருப்பம் காட்டும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அதற்கு இணக்கம் காட்ட மறுப்பதாக கூறப்படுகிறது.
    இதற்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு இல்லை என்பதை காரணமாக கூறும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு, பாஜக சார்பில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தோல்வியை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் முதலமைச்சர் ரங்கசாமி பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
    அதே சமயம் துணைநிலை ஆளுநர், அதிகாரிகளால் அரசுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்படுவதாக அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டதற்கு ஜனவரி மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நிர்மல் குமார் சுரானாவை ரங்கசாமி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
    மற்றொரு புறம் தவெக தலைவர் விஜய்யுடன் எப்பொழுதும் இணக்கம் காட்டும் முதலமைச்சர் ரங்கசாமி, அவரது ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுப்பது பற்றி 5 முறை ஆலோசனை நடத்தினார்.
    பாதுகாப்பு காரணங்களால் அனுமதி தர முடியாமல் போனதால், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனையை ரங்கசாமி வழங்கினார்.
    கூட்டணி தொடர்பாக அண்மையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் உள்ளது. புதுச்சேரி கூட்டத்தில் பாஜகவை விமர்சிக்கும் விஜய், ரங்கசாமியை விமர்சிக்க மாட்டார் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு! ஃபிபா கவுரவம்
    Next Article எலைட் வீரர்கள் வரிசையில் இணைந்த ரோஹித் ஷர்மா; இந்திய ரசிகர்கள் உற்சாகம் !!!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.