Close Menu
    What's Hot

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»எலைட் வீரர்கள் வரிசையில் இணைந்த ரோஹித் ஷர்மா; இந்திய ரசிகர்கள் உற்சாகம் !!!
    விளையாட்டு

    எலைட் வீரர்கள் வரிசையில் இணைந்த ரோஹித் ஷர்மா; இந்திய ரசிகர்கள் உற்சாகம் !!!

    Editor web2By Editor web2December 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251206 224203
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நிறைவடைந்தது. 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

    20251206 230504

    முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 270 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டீ காக் 106 ரன்கள் குவித்தார்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே மிக சிறப்பாக விளையாடி 61 பந்துகள் மீதும் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 116* குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இது அவருக்கு முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 75 ரன்கள் குவித்தார். அதோடு இந்திய அணியில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என சர்வதேச அளவில் மொத்தமாக 20,000 ரன்களை குவித்த நான்காவது வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

    20251206 224530

    இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    தொடரின் வெற்றியை தீர்மானித்த மூன்றாவது போட்டியில் ஆட்டநாயகன் விருது ஜெய்ஸ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    20251206 230010

    முதல் இரண்டு போட்டியில் சதம் இன்றைய போட்டியில் அரைசதம் என தொடரும் முழுவதும் அசத்திய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    20251206 230018

    இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற டிசம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    india Rohit Sharma south africa Virat Kohli Yashasvi Jaiswal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 தேர்தலில் தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி? பாஜகவுக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி
    Next Article இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து தண்ணி காட்டி வரும் மிட்செல் ஸ்டார்க் !!!
    Editor web2
    • Website

    Related Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    July 22, 2026

    வெற்றியுடன்.. ராஜாவாக தாயகம் திரும்பிய ஸ்பெயின் வீரர்கள்..!! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.