Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவிப்பு… இங்கிலாந்து அணி தடுமாற்றம்
    விளையாட்டு

    ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவிப்பு… இங்கிலாந்து அணி தடுமாற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aus 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் 2-வது போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 511 ரன்​கள் குவித்​தது. தொடர்ந்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது.

    பிரிஸ்​பனில் உள்ள காபா மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்​டில் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 334 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஜோ ரூட் 138 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 73 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 378 ரன்​கள் குவித்​தது.அலெக்ஸ் கேரி 46, மைக்​கேல் நேசர் 15 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை ஆஸ்​திரேலிய அணி தொடர்ந்து விளை​யாடியது. மைக்​கேல் நேசர் 16 ரன்​களில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

    இதன் பின்​னர் களமிறங்​கிய மிட்​செல் ஸ்டார்க் சீராக ரன்​கள் சேர்த்து அசத்​தி​னார். அலெக்ஸ் கேரி 69 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் வெளி​யேறி​னார். தனது 12-வது அரை சதத்தை கடந்த மிட்​செல் ஸ்டார்க் 141 பந்​துகளில், 13 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரைடன் கார்ஸ் பந்​தில் அவுட் ஆனார்.

    மிட்​செல் ஸ்டார்க் சுமார் இரண்டரை மணி நேரம் களத்​தில் பேட் செய்​தார். 9-வது விக்​கெட்​டுக்கு ஸ்காட் போலண்ட், மிட்​செல் ஸ்டார்க் ஜோடி 75 ரன்​கள் சேர்த்​தது. கடைசி வீர​ராக பிரண்​டன் டாகெட் 13 ரன்​னில் நடையை கட்ட ஆஸ்​திரேலிய அணி 117.3 ஓவர்​களில் 511 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. கடைசி 4 விக்​கெட்​களுக்கு ஆஸ்​திரேலிய அணி 133 ரன்​கள் சேர்த்​தது.

    ஸ்காட் போலண்ட் 21 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி தரப்​பில் பிரைடன் கார்ஸ் 4, பென் ஸ்டோக்ஸ் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். ஜோப்ரா ஆர்ச்​சர், கஸ் அட்​கின்​சன், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். ஆஸ்​திரேலிய அணி​யில் அனைத்து வீரர்​களும் இரட்டை இலக்க ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கிட்​டத்​தட்ட 150 ஆண்​டு​கால டெஸ்ட் கிரிக்​கெட்​டில் மூன்​றாவது முறை​யாக, 11 ஆஸ்​திரேலிய வீரர்​களும் ஒரு டெஸ்ட் இன்​னிங்​ஸில் இரட்டை இலக்க ரன்​களை எடுத்​துள்​ளனர்.

    177 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது. ஸாக் கிராலி 44, பென் டக்​கெட் 15, ஆலி போப் 26, ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 15, ஜேமி ஸ்மித் 4 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 4, வில் ஜேக்ஸ் 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், மைக்​கேல் நேசர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 43 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள இங்​கிலாந்து அணி இன்​று 4-வது நாள்​ ஆட்​டத்​தை சந்​திக்​கிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்திரேலிய அதிரடியில் நொறுங்கியது இங்கிலாந்து பவுலிங்!
    Next Article மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி !!!
    Editor TN Talks

    Related Posts

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 5, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.