Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»உலகக் கோப்பை கால்பந்து… அட்டவணை வெளியீடு
    விளையாட்டு

    உலகக் கோப்பை கால்பந்து… அட்டவணை வெளியீடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fifaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபிபா நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை 2026-க்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

    ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் 2026-ம் ஆண்டு அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய நாடு​களில் நடை​பெற உள்​ளது. இந்த தொடரில் மொத்​தம் 48 அணி​கள் கலந்து கொள்ள உள்​ளன. தகுதி சுற்​றின் வழி​யாக இது​வரை 42 அணி​கள் தேர்​வாகி உள்​ளன. மீதம் உள்ள 6 அணி​கள் பிளே ஆஃப் சுற்​றின் வாயி​லாக தேர்வு செய்​யப்பட உள்​ளன. இந்த பிளே ஆஃப் சுற்​றில் 22 அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன. இதில் இருந்து முன்​னேறும் 6 அணி​கள் மார்ச் 31-ம் தேதிக்​குள் தெரிந்​து​விடும்.

    இந்​நிலை​யில் உலகக் கோப்பை கால்​பந்து இந்த தொடரில் எந்​தெந்த அணி​கள் எந்த பிரி​வில் இடம் பெற வேண்​டும் என்​ப​தற்​கான குலுக்​கல் தேர்வு மற்​றும் போட்டி அட்​ட​வணை வெளி​யீடு நிகழ்ச்சி நேற்று அமெரிக்​கா​வில் நடை​பெற்​றது. இதன்​படி தொடரில் கலந்து கொள்​ளும் 48 அணி​களும் 12 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் 4 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

    2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை போட்​டிகள் நடை​பெறுகின்​றன. மொத்​தம் 104 போட்​டிகள் நடை​பெற உள்​ளன. லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் அணி​கள் என 12 பிரிவு​களில் இருந்​தும் 24 அணி​கள் அடுத்த சுற்​றுக்கு முன்​னேறும்.

    இந்த 24 அணி​களு​டன் லீக் சுற்​றில் 3-வது இடம் பிடித்த அணி​களுள் 8 சிறந்த அணி​களும் இணை​யும். கால் இறுதி சுற்று முதல் இறு​திப் போட்டி வரை உள்ள அனைத்து ஆட்​டங்​களும் அமெரிக்​கா​வில் நடை​பெறுகிறது. ஜூலை 19-ம் தேதி இறு​திப் போட்டி நியூ ஜெர்ஸி நகரில் நடை​பெறுகிறது.

    நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா அணி ‘ஜே’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் அல்​ஜீரி​யா, ஆஸ்​திரி​யா, ஜோர்​டான் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. அர்​ஜெண்​டினா தனது முதல் ஆட்​டத்​தில் ஜூன் 16-ம் தேதி அல்​ஜீரி​யா​வுடன் மோதுகிறது.

    அமெரிக்கா ‘டி’ பிரி​வில் இடம் பிடித்​துள்​ளது. இதே பிரி​வில் பராகுவே, ஆஸ்​திரேலியா அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இவற்​றுடன் பிளே ஆஃப் சுற்​றில் வெற்றி பெறும் துருக்​கி, கோசோவோ, ருமேனி​யா, சுலோவேக்​கியா ஆகிய அணி​களுள் ஏதேனும் ஒன்று இணை​யும். அமெரிக்கா தனது முதல் ஆட்​டத்​தில் ஜூன் 12-ல் பராகுவே அணி​யுடன் மோதுகிறது.

    மெக்​சிகோ ‘ஏ’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் தென் ஆப்​பிரிக்​கா, கொரியா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்த அணி​களு​டன் பிளே ஆஃப் சுற்​றில் வெற்றி பெறும் செக் குடியரசு, டென்​மார்க், அயர்​லாந்​து, வட மெசபடோனியா ஆகிய அணி​களுள் ஏதேனும் ஒன்று இணை​யும். மெக்​சிகோ தனது முதல் ஆட்​டத்​தில் ஜூன் 11-ல் தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோத உள்​ளது.

    கனடா ‘பி’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் கத்​தார், சுவிட்​சர்​லாந்து அணி​கள் இடம் பிடித்​துள்​ளன. இந்த அணி​களு​டன் பிளே ஆஃப் சுற்​றில் வெற்றி பெறும் ஒரு அணி இணை​யும். 5 முறை சாம்​பிய​னான பிரேசில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் மொராக்​கோ, ஹைதி, ஸ்காட்​லாந்து அணி​களும் உள்​ளன. பிரேசில் தனது முதல் ஆட்​டத்​தில் மொராக்​கோவுடன் மோதுகிறது.

    உலகத் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள ஸ்பெ​யின் ‘ஹெச்’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் கேப் வெர்​டே, சவுதி அரேபி​யா, உரு​குவே அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. 4 முறை சாம்​பிய​னான ஜெர்​மனி ‘இ’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் கியூரோ​சாவ், ஐவரி கோஸ்ட், ஈக்​வே​டார் அணி​களும் உள்​ளன. 2 முறை சாம்​பிய​னான பிரான்ஸ் அணி ‘ஐ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் செனகல், நார்வே அணி​களும் உள்​ளன. இந்த அணி​களு​டன் பிளே ஆஃப் சுற்​றில் வெற்றி பெறும் அணி​யும் இணை​யும்.

    கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோவை உள்​ளடக்​கிய போர்ச்​சுகல் அணி ‘கே’ பிரி​வில் உள்​ளது. இதே பிரி​வில் உஸ்​பெகிஸ்​தான், கொலம்​பியா அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்த அணி​களு​டன் பிளே ஆஃப் சுற்​றில் வெற்றி பெறும் அணி​யும் இணை​யும். போர்ச்​சுகலும், அர்​ஜெண்​டி​னா​வும் லீக் சுற்​றில் தங்​களது பிரி​வில் முதலிடத்தை பிடிக்​கும் பட்​சத்​தில் கால் இறுதி சுற்​றில் மோத வாய்ப்பு உள்​ளது.

    1966-ம் ஆண்டு சாம்​பிய​னான இங்​கிலாந்து ‘எல்’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் குரோஷி​யா, கா​னா, பனாமா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நிகழ்ச்​சி​யின் போது உலகக் கோப்​பையை அறி​முகம் செய்த ஃபிஃபா தலை​வர் கியானி இன்​பான்​டினோ, அமெரிக்​க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமை​திக்​கான விருதை​யும்​ வழங்​கி கவுரவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅட தேங்காய்ப்பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா !!!
    Next Article இந்தியாவின் வளர்ச்சிக்கு AI தொழில்நுட்பம் அவசியம்!- சுபான்ஷி சுக்லா
    Editor TN Talks

    Related Posts

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்!

    August 9, 2026

    ‘தி ஹண்ட்ரட்’ தொடரிலிருந்து விலகினார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்!. ஆசியக் கோப்பையிலும் பங்கேற்பதில் சிக்கல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.