நடிகர் சூர்யாவுக்கு ஒரு சரியான திரைப்படம் தியேட்டரில் வெற்றி படமாக அமைந்து நிறைய வருடங்கள் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சூரறைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வந்ததால் இரண்டு வெற்றி படங்கள் தியேட்டரில் மிஸ் ஆனது.
சூர்யாவும் சரி அவருடைய ரசிகர்களும் சரி தியேட்டரில் ஒரு சரியான வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள கருப்பு திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. அதன் பின்னர் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் இணைந்து ஒரு திரைப்படம் நடித்து முடித்து இருக்கிறார். அது அவருடைய 46வது திரைப்படம்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அதற்கு அடுத்தபடியாக 47-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை மலையாள இயக்குனர் ஜித்து மாதவனிடம் கொடுத்திருக்கிறார். ரோமன்சம் மற்றும் ஆவேசம் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த திரைப்படத்தின் பூஜை இன்று டிசம்பர் 7ஆம் தேதி சற்றுமுன் நடந்து முடிந்தது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நசீம் மற்றும் பிரேமம் புகழ் நஸ்லென் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இது ஒரு ஜனரஞ்சகமான கமர்சியல் திரைப்படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழில் ஆர் ஜே பாலாஜி தெலுங்கில் வெங்கி அட்லூரி மலையாளத்தில் ஜித்து மாதவன் என மூன்று இண்டஸ்ட்ரியல் அடுத்தடுத்து சூர்யா அடி எடுத்து வைப்பது அவருடைய ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
