Close Menu
    What's Hot

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கோவா தீ விபத்து – பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
    இந்தியா

    கோவா தீ விபத்து – பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    goa 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவா தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

    கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அர்போரா கிராமத்தில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவா காவல்துறை உயர் அதிகாரி அலோக் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 3 பெண்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த தீ விபத்து சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போதைய தகவலின்படி விபத்தில் 3 பெண்கள் 20 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் சுற்றுலா பயணிகள். மற்றவர்கள் சமையலறை மற்றும் விடுதி ஊழியர்கள். சுற்றுலா காலகட்டத்தில் இதுவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்தின் எதிரொலியாக, “அனைத்து இரவு விடுதிகளிலும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாத விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்றும் பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த ராசிக்காரர்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது… ஏன் தெரியுமா
    Next Article ஈரோட்டில் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? – செங்கோட்டையன் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    சிம்லாவில்  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.