ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரி மாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு நாடுகள் இரு நாட்டு அதிபர்களுக்கு ஆலோசனை கூறிக்கொண்டு வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்த சமயத்தில் கூட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் போர் நிறுத்தம் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவுக்கு வரும் தேதி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசினார். அதில் அவர் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு அதிபர்கள் இடம் பேசி வருகிறோம். இந்தப் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்து இருக்கிறது. அது மகிழ்ச்சி, ஆனால் உக்ரைன் தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம்தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

