Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனையா? இதை செய்து பாருங்க
    LIFESTYLE

    மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனையா? இதை செய்து பாருங்க

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    irumal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மழைக்காலம், குளிர்க்காலம் அல்லது லேசாக வானிலை மாறினால் போதும் அழையா விருந்தாளியாக சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை நம்மை தொற்றிக்கொள்ளும். வானிலை மாறும்போது இவை ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த பிரச்சனையால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படும் சூழல் உருவாகும்.

    எனவே, இதில் இருந்து உடனடி நிவாரணம் பெற மருந்துகளை பலரும் நாடிச்செல்வார்கள். ஆனால், நம் வீடுகளில் உள்ள சில இயற்கை பொருட்களை வைத்து செய்யும் சில வீட்டு வைத்தியங்கள், சளி, இருமல், தொண்டை கரகரப்புக்கு உடனடி நிவாரணம் தரும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    ஆவி பிடிப்பது: சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனை என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் முதலில் சொல்வது ஆவி பிடி என்பது தான். குளிர் மற்றும் மழைக்காலத்தில், மூக்கடைப்பு, தொடர் இருமல் போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக வந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில், கொதித்த நீரில் யூகிலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை மாலை என இரு வேலை செய்து வந்தால் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    மஞ்சள் பால்: தினசரி இரவு படுக்க செல்வதற்கு முன், பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடிப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை பலரும் அறிந்ததே. இதற்கு காரணம் மஞ்சளில், குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து மழைக்காலத்தில் தினமும் குடித்து வர, தொண்டைக் கரகரப்பு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    மூலிகை டீ: குளிர் மற்றும் மழைக்காலத்தில் சூடான மூலிகை டீ குடிப்பது உடலுக்கு இதமாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரில் துளசி, பட்டை, மஞ்சள், ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    தேன் – இஞ்சி: எளிமையாக நம் வீட்டில் கிடைக்கும் தேன் மற்றும் இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற நம் முன்னோர்களால் இது அதிகம் பயன்படுத்தப்பட்டது.

    இஞ்சி, சளியை இறுக்கமடையச் செய்வதோடு, தொண்டை எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தொண்டை வலியை போக்க தேன் உதவி செய்கிறது. இஞ்சியை அரைத்து அதன் சாற்றை எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் காலை மாலை என இரண்டு வேளை இதனை உட்கொள்ள வேண்டும்.

    கோப்புப்படம்

    கசாயம்: சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் கசாயம் செய்து குடிப்பது சிறந்தது. அதற்கு, உரலில் இஞ்சி துண்டு, 6 மிளகு, 3 கிராம்பு, 2 துண்டு பட்டை, 1 கைப்பிடி துளசி, கொஞ்சமாக புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில், 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி , அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். பின், வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். மழைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. இல்லையென்றால், சளி, இருமல் பிடிக்கும் போது செய்து குடிக்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலீஸ்காரரின் கையை பாய்ந்து கடித்த தவெக நிர்வாகி… புகைப்படம் இணையதளத்தில் வைரல்
    Next Article 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்… களைகட்டியது காஞ்சிபுரம்
    Editor TN Talks

    Related Posts

    சுட்டெரிக்கும் வெயில்!. முகம் எரிச்சலா எரியுதா?. சட்டுனு குளிர்ச்சியாக்கும் மேஜிக் டிப்ஸ் இதோ!

    March 30, 2026

    எலும்பு முதல் இதயம் வரை!. அத்திப்பழம் தரும் அசாத்திய ஆரோக்கிய நன்மைகள்!

    March 30, 2026

    பாத்திரம் கழுவும் திரவமே சமையலறைப் பொருட்களிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது!. அதிர்ச்சி தகவல்!

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.