Close Menu
    What's Hot

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு ஊழியர்கள் வருடாந்திர விடுமுறையை சரண்டர் செய்யலாம்; அறிவிப்பு வெளியீடு
    தமிழ்நாடு

    அரசு ஊழியர்கள் வருடாந்திர விடுமுறையை சரண்டர் செய்யலாம்; அறிவிப்பு வெளியீடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Stalin TN Sec 30 05 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை (Earned Leave) சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை (Earned Leave) சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும்.

    அதன்படி வருடத்திற்கு 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் நடைமுறை தொடரும். 2020 ஏப்ரல் 27 முதல் 2025 செப்டம்பர் 30 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சேர்ந்த காலாண்டை (Quarter) அடிப்படையாகக் கொண்டு 2025–26 ல் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சேர்ந்த பணியில் மாதங்கள் மற்றும் தகுதி பெறும் தேதி:

    பணியில் சேர்ந்த மாதங்கள் தகுதி பெறும் தேதி
    அக்டோபர், நவம்பர், டிசம்பர் 01.10.2025
    ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 01.01.2026
    ஏப்ரல், மே, ஜூன் 01.04.2026
    ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 01.07.2026

    அதேப்போல் 26.04.2020 அல்லது அதற்கு முன்பாக பணியில் சேர்ந்திருந்தும் இதுவரை ஒருமுறையும் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்யாத ஊழியர்களும், தங்கள் சேர்ந்த மாதத்தை பொறுத்து 2025–26 ல் முதல் முறையாக சரண்டர் செய்யலாம்.

    அதன்படி பணியில் சேர்ந்த மாதங்கள் மற்றும் தகுதி பெறும் தேதி:

    பணியில் சேர்ந்த மாதங்கள் தகுதி பெறும் தேதி
    அக்டோபர், நவம்பர், டிசம்பர் 01.10.2025
    ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 01.01.2026
    ஏப்ரல், மே, ஜூன் 01.04.2026
    ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 01.07.2026

    இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் /சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் பொருந்தும்.’ என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 09.12.2025
    Next Article இந்த வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு பதிவு கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    July 2, 2026

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    July 2, 2026

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோல் விடுதலை விவகாரம்! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

    நிலநடுக்கங்களால் உருகுலைந்து போன வெனிசுலா..! நெய்மர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

    நடப்பது குதிரை பேரம் அல்ல; குதிரைப் பந்தயம் – காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி புது விளக்கம்

    போதை இல்லா பொள்ளாச்சி –  ஜூலை 12-இல் வி த லீடர்ஸின் முதல் விழிப்புணர்வு மாநாடு

    கைதிகள்,  வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு கூடுதல் நேரம் – புழல் சிறை நிர்வாகம் உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.