Close Menu
    What's Hot

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் 2026 சீசன் ஏலம்: 350 பேர் பட்டியலில் முக்கிய வீரர்கள் யார் யார்?
    விளையாட்டு

    ஐபிஎல் 2026 சீசன் ஏலம்: 350 பேர் பட்டியலில் முக்கிய வீரர்கள் யார் யார்?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ipl
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்​துக்​கான இறு​திப் பட்டியலில் 240 இந்​திய வீரர்​கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான வீரர்​கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஏலத்​துக்​கான இறு​திப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் இந்​திய வீரர்​கள் 240 பேர், வெளி​நாட்டு வீரர்​கள் 110 பேர் என மொத்​தம் 350 பேர் இடம் பெற்​றுள்​ளனர். தென் ஆப்​பிரிக்க அணி​யின் விக்​கெட் கீப்பர் பேட்​ஸ்​மே​னான குயிண்​டன் டி காக் கடைசி நேரத்​தில் ஏலப்​பட்​டியலில் இணைந்​துள்​ளார். அவரது அடிப்​படை விலை ரூ.1 கோடி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

    ஆஸ்​திரேலிய டெஸ்ட் அணி​யின் கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித்​தும் ஏலப்​பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளார். கடைசி​யாக அவர், ஐபிஎல் தொடரில் 2021-ம் ஆண்டு விளை​யாடி இருந்​தார். ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்​படை விலை ரூ.2 கோடி​யாக நிர்ணயிக்கப்பட்டுள்​ளது.

    முன்​ன​தாக இந்த ஏலத்​துக்​காக 1,390 வீரர்​கள் தங்​களது பெயரை பதிவு செய்​திருந்​தனர். இதன் பின்​னர் இந்த பட்​டியல் 1,055 பேர் கொண்​ட​தாக சுருக்​கப்​பட்​டது. இதில் இருந்து தற்​போது 350 ஆக குறைக்​கப்​பட்டு இறு​திப் பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்த 350 வீரர்​களில் இருந்து 10 அணி​களின் உரிமை​யாளர்​களும் ஒட்டுமொத்​த​மாக 77 பேரை ஏலம் எடுப்​பார்​கள்.

    இந்த 77 பேரில் 31 பேர் வெளி​நாட்டு வீரர்​களும் அடங்​கு​வர். ஏலத்​தில் முதல் செட்​டில் இந்​தியா மற்​றும் மும்பை பேட்​ஸ்​மேன்​களான பிரித்வி ஷா மற்​றும் சர்​ப​ராஸ் கான் ஆகியோர் இடம் பெறக்கூடும். இரு​வரின் அடிப்​படை விலை​யும் தலா ரூ.75 லட்சமாக உள்​ளது.

    பிரித்வி ஷா 2018 முதல் 2024 வரை ஐபிஎல்​லில் பெரிய அளவில் ரன்​கள் குவிக்​க​வில்​லை. இதனால் கடந்த சீசனில் அவரை எந்த அணி​யும் ஏலத்​தில் எடுக்​க​வில்​லை. சர்​ப​ராஸ் கான் 2021-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்​டி​யில் விளை​யாட​வில்​லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெங்​கடேஷ் ஐயரின் அடிப்​படை விலை ரூ.2 கோடி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

    சையது முஸ்​டாக் அலி டி 20 தொடரில் அதிக ரன்​களும், விக்கெட்களை​யும் கைப்​பற்​றி​யுள்ள உள்​ளூர் வீரர்​களான குணால் சந்​தேலே, அசோக் குமார் உள்​ளிட்​டோரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்​றுள்​ளனர். ஏலப்​பட்​டியலில் இங்கிலாந்தை சேர்ந்த விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ஜேமி ஸ்மித், வேகப்​பந்து வீச்​சாளர் கஸ் அட்​கின்​சன், ஆல்​-ர​வுண்​டர் லியாம் லிவிங்​ஸ்​டன், டெஸ்ட் அணி​யின் தொடக்க வீரர் டென் டக்கெட் உள்​ளிட்ட 21 வீரர்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

    இதே​போன்று ஆஸ்​திரேலி​யா​வைச் சேந்த ஆல்-​ர​வுண்​டர் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்​கர்க், ஜோஷ் இங்​லிஷ், மேத்யூ ஷார்ட், கூப்​பர் கானொலி, பியூ வெப்​ஸ்​டர் உள்​ளிட்ட 19 பேரும் இடம் பெற்​றுள்​ளனர். இதில் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்கர்க் ஆகியோரது அடிப்​படை விலை ரூ.2 கோடி​யாக நிர்ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

    தென் ஆப்​பிரிக்​காவைச் சேர்ந்த டேவிட் மில்​லர், குயிண்​டன் டி காக், அன்​ரிச் நோர்க்​கி​யா, லுங்கி நிகிடி, ஜெரால்டு கோட்​ஸி, வியான் முல்​டர் உள்​ளிட்ட 15 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

    மேற்கு இந்​தி​யத் தீவு​களை சேர்ந்த அல்​ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், அக்​கீம் அகஸ்​தே, ஷாய் ஹோப், ராஸ்​டன் சேஸ் உள்ளிட்ட 9 வீரர்​களும் ஏலப்​பட்​டியலில் உள்​ளனர்.

    இலங்​கையை சேர்ந்த வனிந்து ஹசரங்​கா, துனித் வெல்​லால​கே, தீக் ஷனா, டிரவீன் மேத்​யூ, பதும் நிசங்​கா, குசால் மெண்​டிஸ், குசால் பெரேரா உள்​ளிட்ட 12 வீர்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

    நியூஸிலாந்தை சேர்ந்த டேவன் கான்​வே, ரச்​சின் ரவீந்​திரா உள்ளிட்ட 16 பேரும், ஆப்​கானிஸ்​தானை சேர்ந்த ரஹ்மனுல்லா குர்​பாஸ், நவீன் உல் ஹக் உள்​ளிட்ட 10 பேரும் இறு​திப் பட்​டியலில் உள்​ளனர்.

    வீரர்​களை ஏலம் எடுக்க உள்ள அணி​களில் அதி​கபட்​ச​மாக 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் ரூ.64.3 கோடியை இருப்பு வைத்​துள்​ளது. இதற்கு அடுத்​த​படி​யாக 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ் ரூ.43.4 கோடியை​யும், 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன் ரைசர்​ஸ்​ ஹைத​ரா​பாத்​ ரூ.25.5 கோடியை​யும்​ இருப்​பு வைத்​துள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆரம்பிக்கலாமா?. தமிழகம் முழுவதும் திமுகவின் புதிய பரப்புரை இன்று தொடக்கம்!.
    Next Article சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 5, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    Trending Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.